பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 19.4.85 - 127 நீண்ட நிழற்குடை அமைப்புக்கள் இருந்தன. நிழற்சாலை என்பதற்கேற்ப இரு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்கள் இருந்தன. எனினும் இன்னும் இலை உதிர்கால எல்லை நீங்க வில்லையாதலால் அவை முற்றும் தழைத்துப் பூத்துக் குலுங்கவில்லை. இரண்டெர்ன்று நன்கு இருந்தன. வழி நெடுகப் பல கட்டடங்களைக் கண்டேன். உலகி லேயே மிகப் பெரிய அசையும் நாடக அரங்கினைக் கண்டு வியந்தேன். 1864லிலும் அதற்கு முன்பும் கட்டிய கட்டடங். கள் பெரும்பாலும் கருங்கற்களை அடுக்கிக் கட்டியுள்ளன ன்ன்றனர். தெருக்கடைகளில் 'வீண்கூச்சல் வேண்டாம்' என எச்சரித்துப் பலகைகள் இருந்தன. சில கட்டடங்கள் 18,19ம். நூற்றாண்டில் க்ட்டியவை, இன்னும் பொலிவுற்று விளங்கு கின்றன. எங்கும் படக்காட்சி விளம்பரங்கள் தென்பட வில்லை. சில கட்டடங்களில் புறத்திலேயே பல தளங்களுக்கு மேலே செல்ல இரும்புப்படிகள் வைக்கப்பெற்றுள்ளன. (நம் கட்டட்ங்களும் அத்தகைய ஏற்பாடு செய்யலாமா என எண்ணினேன்)-எங்களுக்கு வழிகாட்டியவர் பலவற்றைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். நியூயார்க் பழைய நகரம் நுழைந்தோம். அங்கே ஒரு அகன்ற சாலை (Broad way) இருந்தது. அதன் அகலம் மிகக் குறைவு. பழைய நகலில் பிறவற்றை நோக்க இது அகன்றதாக இருந்தமையின் அப் பெயரிட்டனர் போலும். நம் சென்னையில், பழைய நகராகிய ஜார்ஜ் டவுனில் பிற தெருக்களெல்லாம் குறுகியிருக்க, அக் காலத்தில் அகன்ற தெருவினை, பிராட்வே' என அழைக்கவில்லையா! மற்றும் இங்கே "Village Corner' என்ற ஒரு பகுதி இருந்தது. பழங்' காலத்தில் கிராமமாக இருந்துபின் நகரில் சேர்க்கப் பெற்றிருக்கும். சென்னையின் நுங்கம்பாக்கம் Village Road 'வில்லேஜ் ரோடு என் நினைவிற்கு வந்தது. வழி நெடுகப்பலப்பல் கடைகள் கட்டடங்கள். TAMU: என்ற ஒரு கட்டடத்தைப் பார்த்த போது இது தமிழின்' திரிபோ என நினைத்தேன். ஏனெனில் இங்கே இந்தோ