பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள். னேஷியா, ரோமாபுரி, ஆகிய பெயர் தங்கிய கடைகளும் மூங்கில்முனை போன்றவையும் (Bamboo Corner) gulp நாட்டுபித்தளைச் சாமான் கடைகளும் இருந்தன. கடை களில் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பெற்ற இடங்களை அவ்வப்போது துடைத்துக்கொண்டே இருந்தனர். பொன் வைர நகைக்கடைத் தெருக்களும், சீனர்வாழ் தெருக்களும் பிறவும் அழகுற விளங்கின. Ricksha Carriage என்ற இடம் ஒரு வேளை முன் இங்கு ரிக்ஷாக்கள் இருந்திருக்குமோ என்ற நினைவை உண்டாக்கிற்று. கடைகள் பலவற்றில் நம் நாட்டில் உள்ளமைபோன்று 50%.40% கழிவு உண்டு என்ற விளம்பரங்களைக் கண்டேன். நாளிதழ்களிலும் இத்தகைய விளம்பரங்கள் நிறைய இருந்தன. பலவிடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வங்கிகள் இருந்தன. நாம் வங்கியுள் போகாமலேயே வெளியிடத்தில் காசோலை செலுத்தின் (நம் கணக்கில் பணம் இருந்தால்) பணம் பெறும் முறை போற்றற் குரியது. காய்கறிக்கடைகள் உட்பட எல்லாக் கடைகளிலும் வாங்கும் பொருள்களின் விலைகளைக் கணக்கிட்டுக் காட்டும் கணிப்பொறிகள் இருந்தன. சீனர் நகர் (China Town) என்ற ஒரு தனிப்பகுதியும் உண்டு. அங்கே எல்லாக்கடைகளும் சீனர்களுடையதே. பெயர்ப்பலகை யாவும். சீனமே. சீனக்கோயில் உண்டு. இங்கே சீனர்கள் அதிகமாக உள்ளனர் என்றும் நிறைய இடங்களை வாங்குகிறார்கள் என்றும் கூறினர். எனக்கு சென்னை செளகார்பேட்டை நினைவுக்கு வந்தது. புத்தர் கோயிலுள் சென்றோம். புத்தர் வழிபாடு முதலியவற்றை. விளக்கின்ர். இலங்கையில் பெரும் பெரும் புத்தர் கோயில் களைக் கண்ட எனக்கு இது ஒன்றும் புதியதாக இல்லை. எனினும் இங்கே புத்தர் பெருமான் முன் ஒரு பெருந்தட்டில் பல காகிதச்சுருள்கள் இருந்தன. நான் ஒன்றினை எடுத்து என்ன எனக் காண முயன்றேன். (அங்கே வருபவர்தம் வருங்கால - அதிஷ்டம் பற்றிய குறிப்பு அதில் உள்ள து எனக் காணமுடிந்தது) நான் எடுத்தத் தாளில் Probability