பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நியூயார்க் 19.4-85 129 of Success : Excellent, wherever in the world you may travel, some mystery you sure will unravel. A simple mallet dug out from gravel may turn to be a President's gravel'. நான் வியந்தேன். 'முத்துத் தெரு (Pearl St.) பக்கம் பெருங்கட்டடங்கள் இருந்தன. சிலசிலவிடங்களில் நல்ல பூங்காக்கள் - 'Red Zone' எனக் குறிக்கப்பெற்று fine 100 for iisuse' என்றும் எழுதப்பெற்றிருந்தது பூங்காக் களைப் மதுபடுத்துவோருக்கு அத்தகைய கடுந் தண்டனை போது f 100 = 1200 ருபாய்) வழிகாட்டிக்கோ மற்றவர் களுக்கோ அதுபற்றி விளக்கத் தெரியவில்லை. 19-ம் நூற் தாண்டில் கட்டிய பழைய பழைய கட்டடங்களை (St. Paul church உட்பட) கண்டோம். ஒரு பெரிய வாணிபக் கட்டடம் 100 அடுக்குக்கு மேல் இருக்கும்; அதில் 5000 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர் எனக் கூறினர். சாலைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உண்டு. இலண்டன், பாரிசில் அவ்வளவு அதிகம் இல்லை; இங்கே அதிகம். உந்துவண்டிகளும் அதிகம். நூற்றுக்கணக்கான என ஆயிரக்கணக்கான வண்டிகள் எங்கும் நிறுத்தப் பெற்றிருந்தன. (பல 12 டயர், 10 டயர் இட்ட கன வண்டி கள்) நாள்தொறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகில் பல பாகங்களிலிருந்தும் இங்கே உலாவருகின்றனர். அரசாங் கத்துக்கு நல்ல வருமானம் உண்டு, நம் இந்திய அரசாங்க மும் தமிழக அரசாங்கமும் இத்தகைய வகையில் ஏன் ருத்திருத்தக் கூடாது என எண்ணினேன். பகல் 1 மணி அளவில் ஒரு கழியின் அருகில் பஸ் ன்றது. நாங்கள் அனைவரும் இறங்கி மற்றொரு தீவிற்குச் சிறு கப்பலில் செல்லவேண்டும். பல உந்து வண்டிகளில் வந்தவர்கள் காத்துக் கிடந்தனர். அனைவரும் சிறு கப்பலில் ஏறினோம். சுமார் 15 நிமிட நேரத்தில் ஒரு தீவில் அது நின்றது.(நியூயார்க் நகரைச்சுற்றிலும் பல தீவுகள் உள்ளன.) நாங்கள் சென்ற தீவின் நடுப் பகுதியில் உயர்ந்த சிலை- வெற்றிச் சின்னம் (The Statue of Victory) இருந்தது. 5.19