பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 20-4.85 காலை உறக்கம் விட்டு எழுந்தேன். பிளடெல்பியா விற்கு 23.4.85 விடியலில் புறப்பட வேண்டும் எனவும் அங்கே இடம் பதிவு செய்யப்பெற்றதையும் பிற தகவல் களையும் நேற்று அறிந்த நான், இன்றும் நாளையும் நியூயார்க்கில் பார்க்க வேண்டியவற்றைப் பார்க்க நினைத் தேன். இன்று அனைத்தும் விடுமுறையாயினும் கல்விபற்றிய சில குறிப்புகளை அறிய முடியும் என எண்ணினேன். என்றாலும் இவ்வூரின் பெரிய பொருட்காட்சிச் சாலையினை (Museum of Natural History)ujib Bră jama'ujangujib காணவேண்டும் என்ற அவாவினால் காலை 9 மணிக்குச் சிற்றுண்டி கொண்டு புறப்பட்டேன். நேரே பாதாள இரெயில் வழியே ஒருமுறை மாறி அக் காட்சிச்சாலை உள்ள 81-வது தெரு நிலையத்தை அடைந்தேன். நின்லயத்தை ஒட்டியே அது இருந்தமையின் செல்வதற்கு யாதொரு தொல்லையுமில்லை. உரிய கட்டணம் செலுத்தி உள்ளே புகுந்தேன். - பெரிய ஐந்துமாடிக் கட்டடத்தில் அக் காட்சிச்சாலை அமைந்திருந்தது. முதல் நான்கு மாடிகளிலும் காட்சி. அமைப்புக்கள். நான் நேரே நான்காவது மாடிக்குச் சென்றேன். கடல் வாழ் பொருள்கள் ஒருபக்கம் வைக்கப் பெற்றிருந்தன. 3000 மில்லியன் ஆண்டுகளிலும் அதற்கு முன்னும் கடல்வாழ் உயிர்களின் வளர்ச்சியைக் காட்டும் வகையில் முறைப்படுத்தியிருந்தனர். (வாய் உள்ளன -