பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தொறும் மக்கள் மாறிய பிறவற்றை யும் இந்த மாடியில் காட்சிப்பொருளாக அமைத்திருந்தனர். அடுத்து இரண்டாவது மர்டியிலும் பல நாட்டுப் பொருள்கள் இருந்தன. ஒருபுறம் தென் அமெரிக்கக் காட்சிப் பொருள்கள், மெக்சிகோ நாட்டில் மக்கள் வழிபட்ட உருவங்களில் பல நாக உருவ அடிப்படையில் உள்ளன. பெருங்கற்களில் சிலைகள் வடிக்கப் பெற்றுள்ளன. பழங் காலத்திய் மாயா நாகரிகத்தின் சிதைந்த சின்னங்கள் பல இருந்தன. ஆய்வாளர்களுள் சிலர் நம் தென் இந்திய - தமிழ் நாகரிகத்துடன் 'மாயா நாகரிகம் தொடர்புடையது எனக் கூறுவர். அது எவ்வளவு உண்மை என்று இதைக் காணும்போது புலனாகின்றது. மெக்சிகோ நாட்டிலும் அமேசான் நதிக்கரையிலும் சிவலிங்கம் கண்டு பிடிக்கப் பெற்றன என்றும் அவை தமிழ்நாட்டுச் சிவலிங்கங்களை ஒத்திருக்கின்றன என்றும் சில ஆய்வாளர் கூறியுள்ளார்கள். இங்கே கல்லில் காட்டிய கலைவடிவங்கள் நம் நாட்டுப் பெருங்கோயில்களையும் கடல்மல்லை, காஞ்சி வைகுண்ட் பெருமாள் கோயில் போன்றவற்றையும் என் கண் முன் காட்டுகின்றன. கல்லில் தேர்ச் சக்கரங்கள், வட்டக்கல் சிற்பங்கள், நம் ஊர் செப்புப் பாத்திரங்கள் போன்றவை, பெருங்கல்லில் மனித முகம் இவை நம் நாட்டு நாகரிகத் தொடு இந் நாட்டு நாகரிகம் தொடர்புடையதே என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.(நான் முன் உரோம் நகரைப் பற்றிக் கூறியபோதும் இத்தகைய கருத்தினைக் குறித்தேன்.) நம் நாட்டு அரசாங்கம் சிறப்பாகத் தமிழ்நாட்டு அரசாங்கம் இந்த வகையில் கருத்திருத்தி ஆய்வு மேற்கொண்டால், ஒரு காலத்தில் தமிழன் உலகெங்கணும் பரவி வாழ்ந்தான் என்ற உண்மையை நிலைநாட்டக் கூடும். செய்வார்களா? பின் அதே இரண்டாவ்து மாடியில் பிற நாடுகளின் தொல்பொருள்களின் காட்சிகளைக் க்ண்டேன். ஆப்பிரிக்கா நாட்டு மக்களின் பல்வேறு வகை வளர்ச்சி, வாழ்வு, பயன் படுத்திய பொருள்கள், பிற வைக்கப் பெற்றிருந்தன.