பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 20.4.85 f 41 பும் பெயரும் உள்ளன. அவர்கள் அனைவரும் போற்றப் படத்தக்கவரே. - - காட்சிச் சாலையின் உள்ளேயே இப் பொருள்கள் சம்பந்தப்பட்ட படக்காட்சிகள் (11 மணி 2மணி அளவில்) நடைபெறுகின்றன. வானமுகட்டின் மின் ஒளிக்காட்சியும் (Planatorium) நடைபெறுகின்றது. அவற்றைக் காண வில்லை. நான் இக் காட்சியை முற்றும் கண்டேன் என்று சொல்லமுடியாது; இன்னும் கண் டு குறிப்பெடுக்க ஆசைதான் உடல்தான் இடம் தரவில்லை. சோர்வு அதிகமாகியது. எனவே நூல்நிலையத்தை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு வீடுதிரும் பினேன். மணி 3க்கு மேலாகி இருந்தது. வழியில் பாதாள ரெயிலில் பழக்கமில்லையாதலால் பலரைக் கேட்டுக் கேட்டு வரவேண்டிய நிலை உண்டாயிற்று. இன்று விடுமுறையாத லால்(இங்கெல்லாம் சனி, ஞாயிறு இருநாட்களும் விடுமுறை) இரெயிலில் கூட்டமில்லை. வீட்டிற் குவந்து ஒய்வு பெற்றபின் சற்றே உடல் நலமுற்றது. பிள்ளைகள் படம் போட்டுக் கொண்டும் T. W. படம் பார்த்துக் கொண்டும் இருந்தனர். நானும் அவர்களோடு படம் போட்டுக் காட்டியும் படம் பார்த்துக்கொண்டும் (ஆங்கிலம்) இருந்து, இரவு 8மணிக்குச் சாப்பிட்டு உடனே படுத்துக் கொண்டேன். அயர்ந்து உறங்கினேன். . * *