பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 21.4.85 இன்று சற்று முன்பே கண் விழித்தேன். என் காலைக் கடன்களை முடித்து, குறிப்பெழுதி முடிப்பதற்கு எப்படியும். ஏழு மணி ஆயிற்று. பிள்ளைகள் அனைவரும் எழுந்தபிறகு, காலை உணவு கொண்டோம். இன்று விடுமுறையானதால் (ஞாயிறு) அனைவரும் சற்று மெல்லவே எழுந்தனர். காலை 9.30க்குச் சிற்றண்டியை முடித்துக்கொண்டு, நூல் நிலையத் தைக் (பெரியது) காணப்புறப் பட்டேன். திரு. இராதா கிருஷ்ணன் அவர்களும் என்னுடன் வந்து கடைகள் பலவற்றைக் கர்ட்டினார். ஞாயிற்றுக் கிழமைகளில், அரசாங்க அலுவலகம், அஞ்சலகம் போன்றவைதான் மூடி யிருக்குமே ஒழிய, கடைகள் பலவும் திறந்தே இருந்தன. பலரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலேயே தங்கள் வீடு களுக்கு உரிய சாமான்கள்ை வாங்குவார்களாதலால், இவ்வூர் வியாபாரிகள் அந்நாட்களை விணில் விடுவதில்லை. பல கடைகளில் நல்ல வியாபாரம் நடப்பதைக் கண்டேன். சிறப்பாக உணவுப்பொருள்கள் இந்த நாட்களில் (காய்கறி கள் உட்பட) வாங்கிவைத்து விடுவார்கள். நண்பர், நம் ஊர்க்கார்ர் வைத்திருந்த ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அவர் காரைக்குடியிலிருந்து வந்த திரு. அருணாசலம் செட்டியார் என்பவராவர். அங்கே நம்மூர்ப் படங்களெல்லாம் வீடிய்ோ எடுத்து வைத்தவற்றை வாங்கிச் சென்று வாடகைக்குத் தருகிறார்களாம். ஒரு நாளைக்கு ஒரு படத்துக்கு ஒரு ட்ாலர். அவர் கடையில் எல்லா, வகையான பொருள்களும் இருந்தன. இங்கே எல்லாப்