பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 21-4-85 (43 பொருள்களும் விலை கூடியிருக்க, இரண்டொன்றின் வில்ை மட்டும் குறைவாக இருப்பதை அறிந்தேன். சிறப்பாக நல்ல. உயர்ந்த திராட்சை பவுண்டு 1.75க்கும் (கிலோ சுமார் 40 ருபாய்)க்கும் நல்ல உயர்ந்த பாதம் பருப்பு பவுண்டு 1.99க்கு (கிலோ சுமார் 50 ரூபாய்)க்கும் விற்கிறார். (பின் சிகாகோவில் இவையே மிகவும் குறைவாக ஒரு டாலருக்கு விற்பதிறிந்தேன்.) நம் ஊரில் இவ்வளவு நல்லதாகக் கிடைக் குமா என்பது ஐயமே. கிடைத்தாலும் முந்தையது 120க்கும் பிந்தியது 150க்கும் குறைவாகக் கிடைக்காது. இவையும் இன்னும் சிலவும் குறைவாக இருப்பதற்குக் காரணம் இவர் கள் இவற்றைப் பக்கத்திலுள்ள கென்யா நாட்டிலிருந்தும் பிற தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் பெறுகிறார்களாம். அப்படியே பருப்பு வகைகள் அனைத்தும் வருகின்றனவாம். நான் அவரொடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் திரு. இராதாகிருஷ்ணன் என்னை நூல் நிலையத்துக்கு இரெயிலேற்றி அனுப்பிவிட்டு, வேறு நண்பர் ஒருவருடன் வேறிடத்துக்குச் சென்றார். நான் இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் பர்தாள இரெயிலில் பலவிடங்களுக்குச் செல்ல எளிதாக இருக்கக்கண்டேன். 42வது தெரு நிலையத்தில் இறங்கினால் பக்கத்தில்தான் என்றனர். இங்கே பல இடங். களில் தெருக்களெல்லாம், எண்ணிட்டே அழைக்கப்பெறு கின்றன. நான் அந்த நிலையத்தில் இறங்கினேன். எனினும் நூல்நிலையம் விடுமுறையாதலால் காண முடியவில்லை. நான் வெளியில் சென்றபின் நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. மணி அவர்கள் தேடிவந்ததாகக் கூறினர். மற்றும் கல்வித்துறை அன்பர் ஒருவர் சில குறிப்புக்களைத் தந்துள்ளார். நியூயார்க் நகரில் இளம் பிள்ளைகள் முதல் உயர்கல்லூரிவரையில் பல வகையில் கல்விமுறைகள் இருப்ப தோடு, பெரியவர்களுக்குப் ப்யன்படும் வகையில் - பல துறை களில் ஒய்வு நேர்ங்களில் கற்றுக் கொடுப்பதாக் அறிந்தேன். “New York City Board of Education's orp 90 palsyth எல்லாவகையான பாடங்களையும் பெரியவர்களுக்குக்