பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 22.4-85 நியூயார்க்கில் இன்று கடைசிநாள். நாளை காலை விமானத்தில் பிளடெல்பியா செல்லவேண்டும். எனவே இன்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு முக்கியமாக நூல்நிலையத்தையும், பிறவற்றையும் காண வேண்டும் என முடிவு செய்தேன். உடல் நிலையும் ஒத்துழைத்தது. காலை உணவுக்குப்பின் 11 மணிக்குமேல் நியூயார்க் நூல்நிலையம் சென்றேன். நான்கு மாடி கொண்ட பெரிய கட்டடம் அது. உலக மொழிகளில் வெளிவந்த பல நூல்கள் இங்கே வைக்கப் பெற்றுள்ளன. பெரும்பாலும் அமெரிக்கநாட்டு எல்லா வகையான துறைகளுக்கும் ஏற்ற - எழுதப்பெற்ற மிகப் பழங்கால முதல் வெளியிடப்பெற்ற நூல்கள் அனைத்தும் இருந்தன. சில ந்ல்லாசிரியர்தம் புகைப்படங்களுடன் அவர் தம் கையெழுத்து இட்ட பல ஏடுகளும் பார்வைக்கு வைத் திருந்தனர். மேலும் அமெரிக்க நாட்டுச் சட்டதிட்டங்கள். விதிகள் இன்ன பிற அனைத்தும் - நாடொறும் உண்டாகும் மாறுதல்களுடன், முறைப்படுத்தி வைக்கப்பெற்றிருந்தன. நாட்டு விடுதலைக்குப்பின் அமைத்துக் கொண்ட அரசியல் சாசனங்களும் அவற்றை அடுத்த பிற திட்டங்களும் திருத்தங் களும் நல்ல முறையில் கட்டப்பெற்று (Bind) அடுக்கி வைத் திருந்தனர். அறைகள் அனைத்தும் செம்மையாகப் பாது காக்கப் பெற்றன. ஆய்வாளர்கள் அமர்ந்து தேவையான குறிப்புகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளும் வகையில் நாற் காலி முன் பலகை அனைத்தும் இருந்தன. ஓர் அறையில் greーl0 -