பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முறையும் ம்லேயா சிங்கப்பூருக்கு ஒருமுறையும் சென்று வந்துள்ளேன். ஆனால் உலகை முற்றும் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் அப்போதெல்லாம் உண்டாக வில்லை. இன்று எழுபது வயது கடந்தபின் இந்த எண்ணம் உண்டாயிற்று. வள்ளியம்மாள் கல்வி அறம்' என்று. அன்னையின் பெயரில் அறக்கட்டளை நிறுவி, அதன்வழியே பள்ளிகள் அமைத்து, இரண்டாயிரம் பிள்ளைகளுக்குக் கல்வி அளிக்கும் நிலையில், பிற நாடுகளில் உள்ள கல்வி முறையினைக் காணவும், ஆங்காங்குள்ள சமுதாய நெறியினை உணரவும் எண்ணவும், அவற்றில் அமைந்த நன்நெறிவழியே நம் நாட்டைத் திருத்த முடியாவிடினும் நம் பள்ளியில் பயிலும் பிள்ளைகளையாயினும் ஒரளவு திருத்திச் சமுதாய நெறியினைச் செம்மையாக்கலாம்; நல்ல கல்வி நிலையினை ஒம்பலாம் என எண்ணியும் இப்பயணம் மேற்கொண்டேன். அதே சமயத்தில் தமிழக அரசின் நல்லாணை வழியே,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் க ழ க த் தி ல் ஆட்சிக் குழு உறுப்பினனாகச் செயலாற்றுகின்றமையின், அத்தமிழ்ப்பல்கலைக்கழகமும் பிற நாடுகளில்-பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வாழும்-வளரும் நிலை கண்டறிந்து சொல்லுமாறு பணித்தார்கள். அமெரிக்க நாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவும் மலேயாப் பல்கலைக் கழகமும் கவாயத் தீவின் சைவசித்தாந்த மடமும் எனை வருமாறு அழைப்பினையும் அனுப்பிவைத்தனர். இவற்றின் பிணைப்பின் வழியே இந்த என் உலகப் பயணம் அமைந்தது. நான் புறப்படு முன் பல அன்பர்கள் இந்த வயதில் தனியாகச் செல்ல வேண்டாம்; யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள் என வற்புறுத்தினர். எனினும் நான் எப்படியோ மனஉறுதியுடன், என்றும் உடனிருக்கும் இறையருளையே எண்ணிப் புறப்பட்டேன். அடிக்கடி விமான விபத்துகள் நடக்கும் இந்த நாளில் முப்பது முறை விமானங்களில் ஏறி இறங்கிய என் உலகப் பயணம் ஒரளவு அஞ்சத்தக்கதாக் இருந்த போதிலும், யாதொரு தடங்கலோ-சிக்கலோ-மாறுபாடோ ஒன்றும் இல்லாமல்