பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. - . ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நூல்களை உடன் எடுத்தும் தந்தார். பழைய நூல்களையும் புதுப்பிக்கும் முறையில் அழகிய வகையில் செப்பம் செய்து கட்டுப்படுத்தி, அட்டைக்கு மேல் அட்டையிட்டு (எல்லாத், துறைகளின் நூல்களையும்) காப்பாறுகின்றனர். இங்கே தமிழ்நாட்டில்-ஏன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்-இல்லாத நூல்கள் சிலவும் இருந்தன. உதாரணமாக அகராதியில் (தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம், பிரஞ்சு) 27 வகை இருந்தன. எனினும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியோ, கலைக்களஞ்சியமோ இல்லை. . பொதுவாக மேலே சொல்லியபடி இந்திய முறைப்படி எல்லா நூல்களும் இருந்தன போக, தமிழிலும் தமிழ் பற்றிய ஆங்கில நூல்களே அதிகம் இருந்தன. (அவையும் முற்றும் இருந்தன என்று கூற முடியாது) அதிலும் கிறித்துவ சமய சம்பந்தமான நூல்கள் அதிகம். 1828ல் நெல்லூரில் அச்சிட தமிழ்ப் பாடல்கள் என்ற தொகுப்பு ஒன்று. அப்படிமே சென்ற நூற்றாண்டில் வெளிவந்த நூல்கள் தமிழ் பற்றி P.T இனிவாச ஐயங்கார், சேஷ ஐயங்கார், கனகசபைப்பிள்ளை போன்றோர் எழுதிய ஆய்வு நூல்கள் இருந்தன. இலக்கணம் பற்றிய நூல்களும் இந்திய சமய நூல்களும் ஒரு சில இருந்ததே ஒழிய முற்றும் இருந்தன என்று சொல்ல முடியாது. பிற்காலத்தில் இந்த நூற்றாண்டில் - தற்காலத் தில் வெளிவந்த நூல்களில்கூட மிகமிகச் சிலவே தான் இருந் தன. தெ. போ. பி.யின் ஒரு நூல் - இப்படி விரல்விடக்கூடிய நான்கைந்து நூல்கள், தமிழ்ப் பேரறிஞர் பலர் வெளி யிட்ட நூல்களும் வேறு தனிப்பட்டார் ஆய்வு நூல்களும் வளரும் தமிழில் உள்ள பல இதழ்களின் பெயர்களும் பல்கலைக்கழக வெளியீடுகளும் (அண்ணாமலைப் பல்கலைக் சழக வெளியீடுகள் சில தவிர்த்து) காண இயலவில்லை. ஏனென்று கேட்டபோது, அவைபற்றிய தகவல் அவர்களுக்கு இல்லை என்றும், முறையாக அனுப்பப்பெறின் அடுத்துவரும் தொகுதிகளில் அவற்றைச் சேர்க்க இயலும் என்றும் சொன் னார்கள். நம்நாட்டில் தமிழ் நூல்களை அச்சிடும்போது, அரசாங்கத்துக்கு நான்கைந்து படிகள் தரச் சொல்லு