பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஏழு நாடுகளில் எழுபது நாடகள் மாலை 5 மணி அளவிற்கு நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. சுப்பிரமணியம் அவர்கள் (மணி) இங்கு வந்தார். நேற்றே தொலைபேசியில் தகவல்கள் சொன்னமை குறித்தேன். இன்று அவர்கள் அமெரிக்காவில் உள்ள தமிழர் தம் நிலைபற்றிச் சொன்னார்கள். நெடுநேரம் பல்வேறு பொருள்கள் பற்றிப் பேசினார். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோனாபட்டினைச் சேர்ந்தவர்கள். வருபவர் அனைவருக்கும் தாமே வலிய வந்து உளமுவந்து உதவி செய்யும் பண்பினர் என்பதையும் அறிந்தேன். அவர்தம் பண்பினைப்பற்றி முன்னரே இராதாகிருட்டிணன் அவர்கள் சொல்லி இருந்தார்கள். - நியூயார்க்கில் ஒருசில தனிப்பட்ட குடும்பங்கள் தவிர்த்து பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில், தமிழ் இல்லை என வருந்தினர். ஒருசில குடும்பங்களில் இளங்குழந்தைகளிடம் வீட்டில் தமிழிலன்றி ஆங்கிலத்தில் பேசுவதே இல்லை என வும் சிலர் 4,5 வயதிலேயே தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து) வல்லவராகியுள்ளார்கள் என்பதையும் குறித்தார்கள். அத்தகைய குடும்பங்களைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்த நினைந்தேன். எனினும் இரவு நேரமாதலால் தொல்லை தரும் எனக் கருதி மனதார வாழ்த்தினேன். இங்கும் தமிழ் பயில விரும்புவோருக்கு நல்ல எளிய நூல் கள் இல்லை என்பதைக் குறிப்பிட்டார். கோடிக்கணக்கில் கல்விக்கென வாரி வழங்கும் தமிழக அரசு இத்தகைய வெளி நாட்டுத் தமிழர்களுக்கு ஒருசில லட்சங்களாவது செல விட்டால் மிக்க நன்மை விளையும் எனக் கருதினேன். சென்னை வந்த பிறகு உரியவர்களைக் கண்டு பேசலாம் என நினைத்தேன். பின் அவர்கள் எங்களுடனேயே உண்டு மகிழ்ந்து அன்பின் கையுறை தந்து என் பயணம் வெற்றியுற வாழ்த்தி, சில முக்கியமான இடங்களுக்கு அறிமுகம் செய்து, முகவரி கொடுத்து, தொலைபேசியில் ஏற்பாடுகள் ச்ெய்வ தாகவும் சொன்னார்கள், !