பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 23-4-86 155 நான் தங்கியிருந்த விடுதிபற்றிச் சிறிது சொல்லத்தான் வேண்டும். சூரிச் விடுதிபற்றி முன்னரே எழுதியுள்ளேன். இன்னும் எங்கெங்கே எந்தெந்த விடுதிகளில் தங்குவேனோ தெரியாது. இது மிகப் பெரியது என்றேன். பொதுவாக இது நியூயார்க்கிலோ லண்டனிலோ இருந்தால் நாளைக்கு 80 அல்லது 100 டாலர் (சுமார் ஆயிரம் ரூபாய்) வாங்குவார் கள். இங்கே 28 டாலர்தான் வாங்கினர். எல்லா வசதி களும் உள்ளன. நான் நியூயார்க்கில் அன்பர் வீட்டில் தங்கினமையால் பெரும் விடுதிகள் பற்றி ஒன்றும் அறிய வில்லை. இவ்வூர் நியூயார்க்கை நோக்கச் சிறியதாயினும் பெரிய விமான நிலையம் - பலவகை தொழிற்சாலைகள் - பிறநாட்டு உள்நாட்டுகாரர் செயல்புரி தொழிலிட்ங்கள், பல்கலைக்கழகம், பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருந் தமையின் பெருத்த வியாபாரத் தலமாக உள்ளது. எனவே பலரும் வந்து தங்குவர் போலும். இங்கே பெரும்பாலும் - இது பல்கலைக்கழக நகர் (University City) எல்லையில் இருந்தமையால் அதிகமாக மாணவர்களே தங்கியிருந்தனர். உள்ள்ே ஒரு நகர் போன்றே எல்லாக் கடைகளும் இருந்தன. பருகு பானங்கள் - பலகாரங்கள் - நம் நாட்டு முறுக்கு சீடை உட்பட - பலகாரங்களும் இருந்தன. எதையும் யாரும் . தொட்டு விற்பதில்லை. தேவையானவர்கள் அவற்றிற்குரிய காசுகளை உரிய இடத்தில் இட்டு, தேவையான பொருளுக்கு நேரே உள்ள பொத்தானை அழுத்தினால் உரியது கிடைக் கும். அப்படியே சில்லறை தேவையானாலும் ஒரு டாலரை மடிக்காது ஒரு பெட்டி வாயிலில் இட்டால் கீழே தேவையான சில்லறை 50 காசு, 25, 10, 5 அளவில் சரியாக வந்துவிழும். உணவு விடுதியிலும் அப்படியே. எல்லா வகையான உண்வு, களும் நன்கு சுவையுடன் தயாரிக்கப் பெற்று வரிசையாக அடுக்கி வைக்கப்பெற்றுள்ளன. நாம் ஒரு தட்டினை எடுத்துக் கொண்டு, தேவையானவற்றை எடுத்துவைத்துச் சென்றால் உரிய தொகையினைப் பெற்றுக்கொள்வர். பின் பக்கத்திலுள்ள பரந்த அரங்கில் மேசைகளின்மேல் வைத்து உட்கார்ந்து அமைதியாகச் சாப்பிடலாம். அப்படியே