பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 குறித்த கால எல்லைப்படி என் பயணம் அமைந்ததை எண்ணி, அதற்குக் காரணமாகிய இறைவனைப் போற்றி, வாழ்த் தி ய நல்ல அன்பர்களுக்கு நன்றி கூறி அமைந்தேன் - அமைகின்றேன். நா ன் சென்ற இடமெல்லாம் தமிழ் மக்களும் அமெரிக்க, ஜப்பான் நாட்டு மக்களும் வழியிடைக் கண்ட போதெல்லாம் உதவிய பிற நாட்டு மக்களும் என்னை முன்பின் அறியா நிலையில் பரிந்து எல்லா வகையான உதவிகளையும் செய்து ஆதரித்த பெருநிலையினை எண்ணி அவர்களை யெல்லாம் வணங்கக் கடமைப்பட்டவனாவேன். அவர்கள் செய்த உதவிகளைப்பற்றியெல்லாம் என் நூல் முழுவதும் குறித்துள்ளேன். அவர்களுக்கு என் நன்றி உரித்து. அரசாங்கத் தூதுவனாகவோ அல்லது அமைச்சர் களுடன் இணைந்து கொண்டோ அன்றி வேறு அதிகார நெறியிலோ நான் பிற நாடுகளுக்குச் சென்றிருந்தேனா யின், பலவகையான சிறப்புகளுடன் நான் வரவேற்கப் பெற்றிருப்பேனாயினும், இத்துணை மக்களைக் கண்டு, அவர்களுடன் ஒன்றி வாழ்ந்து, எல்லா வகையான வாழ்க்கை நெறிகளையும் அறிந்து அலசி மகிழ்ந்து, உடனுறைந்து, இந்த நூலையும் எழுதியிருக்க மாட்டேன் என எண்ணுகிறேன். உயர்ந்த பெருமாளிகையிலோ - பெரிய விடுதிகளிலோ அரசாங்க விருந்தாளியாக இருந்து வருவதிலும் எல்லா மக்களொடும் இணைந்து வாழ்ந்த நிலையில் பெற்ற இன்பம் பெரிது. இதுவே என் பயணத்தின் குறிக்கோளுமாகும். பெரும்பாலான இடங் களில் நான் என் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்விலேயே இருந்து வந்தேன். நான் ஒரு பேராசிரியன் என்ற காரணத்தால் பிற நாட்டு அறியா மக்களும் என்னிடம் காட்டிய மரியாதையை எண்ணி, அந்த நிலைக்கு என்னை உயர்த்திய அன்னைத் தமிழின் அடி பணிந்து போற்றக் கடமைப் பட்டுள்ளேன். எழுபது வயதில் எழுபது நாட்கள் (1985 ஏப்பிரல் 3 தொடங்கி ஜூன் 12 வரை) என் பயணம் அமைந்தது. சுற்றிய நாடுகள் ஏழு தனி நகர் இரண்டு. எனவே இரு