பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தேர்வு எழுதி, தம் படிப்பின் எல்லையில் நிற்பர். தமிழ்த் துறையின் ஆய்வுக்கட்டுரை 116 பக்கங்கள் (பிற்சேர்க்கை நீங்க) கொண்டது. இதை எழுதிய எம். ஏ. மாணவி. அமெரிக்கப்பெண்:ஒரு தமிழ் மகனை மணந்து கொண்டவர். கருமுத்து மாணிக்கவாசகம் செட்டியார் மகனர் தியாக ராசன் மனைவியாவர்.இவர் தற்போது எம். ஏ. பயிலுவதற் காகவே. இங்கே வந்து தங்கியுள்ளார். சொந்த ஊரும். இதுவே தேர்வு முடிந்ததும் சூன் மாதத்தில் ஊர் திரும்புவார் சென்னையில் கணவருடன் அடையாற்றில் தங்கியுள்ளார். கருமுத்து தியாகராஜர் வழித்தோன்றல்கள் தமிழைப் பயின்று வளர்க்கும் நிலை கண்டு மகிழ்ந்தேன். நான் மதுரைத் தியாகராஜர் கல்லூரியில் ஒராண்டு பணியாற்றிய போது(1958 - 59)இவர் மாணவராக இருந்த்ார். என்னுடன் நெருங்கிப் பழகி, சுருளி நீர்வீழ்ச்சி முதலிய இடங்களுக்கு வந்து மகிழ்ந்தவர். ஆனால் கண்டு நெடுநாளாயிற்று. சென்னை வந்தால் காணலாம் என எண்ணுகிறேன். நம் நாட்டில் எம்.ஏ நடைபெறுவதற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டினைக் கண்டேன். எதையோ எப்படி யோ படித்து உருப்போட்டு தேர்வு எழுதி வெற்றி பெறும் நம் நாட்டு மாணவர் அறிவு, இவ்வாறு பல பேராசிரியர் தம். கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் ஆய்வுக்கட்டுரை தயாரித்து, புதியன கண்டு காட்டும் திறன் மிக்க மாணவர் தம் அறிவுடன் ஒத்துக் காண இயலவில்லை. தமிழ்நாட்டில் ஒரு முறை எம். ஏ. மாணவருக்கு இத்தகைய கட்டுரை எழுதும் முறை இருந்தது. எனினும் அதில் பலர் மற்றவரிடம் எழுதி வாங்கியவற்றையே தம்முடையன எனக்காட்டிப் பட்டம் பெற நினைத்ததை அறிந்து, பின் நீக்கிவிட்டனர். ஏன்? நம் நாட்டில் டாக்டர் பட்டம் பெறவே பலர் சில ஆயிரங்களுக்கு கட்டுரை எழுதித்தர, அதைத் தம்மதாகக் காட்டி, பின் தேர்வாளர்களையும் கண்டு தம் பட்டத்தைப் பெறுவதாக ஒரு வதந்தி உலவுவதைப் பலரும் அறிவர். அது ஒருவேளை உண்மையாக இருப்பின் மிகமிக வருந்த வேண்டி