பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளிடெல்பியா 24-485 163 மையினையும் சிறப்பையும் போற்றிக் காக்கும் நிலையினைக் கண்டேன். சங்க இலக்கியம் கற்கும் மாணவரும் வெறும் பேச்சுத் தமிழைப் பழகிக்கற்கும் மாணவரும் கலந்து உறவாடி (தேவையாயின் தமிழகம் வந்து ஆய்வு செய்து) நம் நாட்டுப் பண்பினைப் போற்றி வளர்க்கும் நிலை அறிந்து மகிழ்ந்தேன். தமிழ்நாட்டில் உள்ள கோடரிக்காம்புகளால் ஒரு வேளை தமிழ் நிலைக்குமோ என அஞ்சிய என் உள்ளத் துக்கு இவர்தம் உழைப்பும் ஊக்கமும் உணர்வும் தமிழ் நலம் பேணும் தகைமையும் தமிழ் என்றென்றும் வாழும் என்ற உளநிறைவைத் தந்தன. இவ்வாறே வெளிநாடுகளில் தமிழ் போற்றப்படும் நிலை எண்ணி மகிழ்ந்து இவர்களுக்குத் தமிழக அரசு உதவக் கடமைப்பட்டுள்ளது என்ற கருத்தில் என்னை மறந்து அப்படியே உறங்கினேன்.