பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 25-4-85 இன்று காலை மறுபடியும் மழைபெய்ய ஆரம்பித்து விட்டது. ஏனோ நான் எங்கே சென்றாலும், பயணம் தொடங்கிய நாள் முதல் மழை என்னுடனேயே வருகின்றது. ஆயினும் இங்கே இது வரவேற்கத்தக்கது என்றனர். காலை யில் பல்கலைக்கழகத்தின் பல இடங்களைத் தனியாகச் சுற்றிப் பார்த்தேன். மாணவர்தம் சலியா உழைப்பும் எப் போதும் விரைந்து சென்று செயல் புரியும் தன்மையும் கண்டு வியந்தேன். தபால்கள் எழுதவேண்டுவனவற்றை எழுதி அருகில் இருந்த அஞ்சல் நிலையத்தில் சேர்த்து வந்தேன். இன்று தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களுக் கும் ஒரு கடிதம் எழுதினேன். பிறகு காலையில் நல்ல உணவு கிடைக்கவில்லை யாதலால், பால் மட்டும் உண்டேன்.உடன் 11.30க்கே நான் தங்கிய விடுதியிலேயே சோறும் தக்காளிப் பச்சடியும் கிடைத்தன. உண்டு முடித்ததும் பல்கலைக் கழகத்தே பணியாற்றும் திரு. நெடுமாறன் அவர்கள் நேற்றே சொல்லியபடி வந்து சேர்ந்தார். இருவரும் வெளியே புறப்பட்டோம். - உந்து வண்டியில் உரிய காசு இட்டு இருவரும் அமர்ந் தோம. பல முதியவர்கள் காசு இடாமலேயே . ஏதோ ஒரு அட்டையைக் காட்டி ஏறினர். சிலர் மொத்தமாக (Season Ticket) வாங்கிய அட்டைகளைக் காட்டினர். நடத்துநர் இங்கே இல்லை. ஒட்டுநர் பக்கத்திலேதான் ஏற வேண்டும். அவரும் கண்காணிக்கிறார். எனவே தப்பமுடியாது. வயதானவர்களைப்பற்றிக் கேட்டேன். இந்நாட்டில் 12