பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 25.4.85 167 யத்தை விரும்பிப் படிக்கும் மேநாட்டு மாணவரும் இருந்த னர். அவருள் இருவர் அண்மையில் தமிழகம் வந்து நேரில் பல கற்க இருக்கின்றனர். எனினும் விருந்தில் பாடங்களைப் பற்றிப் பேசாது, பொதுவாக மகிழ்ச்சி கலந்த உரையாடல் களையே கையாண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அமைதியாக மெல்ல நம் நாட்டு முறையில் விருந்து உண்டோம். (பக்கடா, இரசவடை, பிரிஞ்சுசாதம், புளி சாதம், தயிர்ச்சாதம், உருளைப் பொரியல், காராமணி மொச்சை கோசுக்கூட்டு, மோர்க்குழம்புவடை, அப்பளம், ஊறுகாய் இவைகள் பரிமாறப்பெற்றன). கடைசியில் இனிப்பும் (இரசகுல்லா) வழங்கப்பெற்றது. அனைவரும் மகிழ்ச்சியாக உண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். விருந்து முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். தமிழ்ப் பேராசிரியை திருமதி. இராசம் அவர்கள் அன்புடன் வழியனுப்பினார்கள். அவர் களுக்கு எங்கள் பள்ளிப் பிள்ளைகள் செய்த பூவேலை நிறைந்த மேசை விரிப்பையும் கைகுட்டையையும் அன்பளிப் பாகத் தந்து வந்தேன். அத் துறைத் தலைவராக உள்ள அன்னையார் அவர்களுக்கு சந்தனக் கட்டையால் ஆன பேனாவினைத் தந்து வந்தேன். இவ்வளவு தமிழ் நலம் பேணும் இந்த இடத்திற்கு இதுவரை எந்தத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்திலிருந்தும் பிறவிடங்களிலிருந்தும் பேராசி ரியர்களோ, தமிழ்நாட்டுத் தலைவர்களோ வந்ததில்லை யாம். எனவே என் வரவு அவர்களுக்கு உண்ர்வு ஊட்டி மேலும் தொடர்ந்து பணி செய்யத் துணை நின்றது எனக் கூறிப் பிரியாவிடை தந்து அனுப்பினர். நானும் அவர்களிடம் விடைபெற்று நாளைக்காலை பால்டிமோர் செல்லவேண்டி இருப்பதால் அறைக்கு வந்து ஓய்வுபெற்றேன். .