பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தனிநகர் விட்டு ஏழு நாடுகளில் ஏழுபது நாள்கள்' என இந்த நூலுக்குப் பெயரிட்டேன். நாள் தொறும் நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அ ன் றா டம் இரவிலோ மறுநாள் காலையிலோ குறிப்பு எழுதி முடித்து, அன்றாடக் குறிப்பு முறையிலேயே இந் நூலைத் தொகுத்துள்ளேன். நான் பார்த்த இடங்கள் பல. பார்த்த துறைகளும் பலப்பல. கல்வி தமிழ் என்ற இரு நோக்கோடு என் பயணம் அமைந்தது என மேலே குறிப்பிட்ட போதிலும், பிற துறைகள் பலவற்றையும் கண்டு எழுதும் நிலையில் நான் ஈர்த்துச் செல்லப் பெற்றேன். அவ்வந் நாட்டு மக்களின் வாழ்க்கை நெறி - சமுதாய நிலை - பொருளா தாரம் - தொழில்வளம் - பணிநிலை . தனியார் செயல் - அரசாங்கப்பணி - போக்குவரத்து-வாழ்வின் வசதிகள் சமய நெறி - பண்பாட்டு மரபு - வரலாறு நீதி. இயற்கை இணைப்பு முதலிய பல வகையினையும் கண்டு ஆங்காங்கே குறித்துள்ளேன். இவற்றுள் ஒரு சிலவற்றை நான் நூல்கள், இதழ்கள், தொலைக் காட்சி ஆகியவற்றைக் கண்டும் படித்தும் எழுதியுள்ளேன். ஒருசிலவற்றை நேரே கண்டுபொருள்காட்சிகள் முதலியன கண்டு. அவ்வப்போது

  • நாட்கள் என்ற சொல் பற்றி ஒரு சிறு விளக்கம். 'நாள்கள். என்பதுதான் இலக்கண முறைப்படி சரியாயினும், நாட்கள்' என்று நான் கொண்டதற்கு காரணம் காட்டல் வேண்டும். நாள்கள்' என்னும் போது ஒலியமைப்பில் ஓசை தடைப்படுகின்ற (Hiatus) காரணத்தால் இம்மாற்றம் கையாளப் பெறுகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் பச்சையப்பர் கல்லூரியில் என் பெறுப்பில் நடைபெற்ற புத்தொனிப் பயிற்சி (Crientation Coures) வகுப்பில் பெரும் புலவர் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை உட்பட பல அறிஞர்களும் இருபது கல்லூரிகளின் பேராசியர்களும் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையினரும் இரண்டு மணி நேரம் இச்சொல் பற்றி விவாதித்து, ஆராய்ந்து. 'நாள்கள்_தரன் இலக்கண மரபில் ஏற்றுக் கெர்ள்ள வேண்டியதாயினும், ஓசை இனிமை கருதியும் இடையில் ஒசைத் தடங்கல் இன்றிச் செல்ல வேண்டியு. (இலக்கண நெறியும் அந்த வகைக்கே வழிசெய்கின்ற ஒன்றாதலானும்) நாட்கள்' எனவும் எழுதலாம் என முடிவு செய்தனர். பலரும் அச் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். எனினும் தமிழாசிரியனாகிய நான் பயன். படுத்துவது.தவறு எனச் சிலர் கருதக்கூடும். எனவே இக் குறிப்பினை ள்.ழுதினேன்.