பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்டிமோர் 26.4.85 இன்று விடியற்காலை எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, 8 மணிக்குப் புறப்படும் விமானத்துக் கெனத் தயாரானேன். நான் தங்கிய விடுதியில் உள்ள வட மொழி, தமிழ் பயிலும் அமெரிக்க மாணவர் ஒருவர் உடனி ருந்து விமானநிலையம் செல்லும் உந்து வண்டியில் ஏற்றி அனுப்பினார். விமானநிலையம் வந்து 8.24க்குப் புறப்படும் விமானத்தில் ஏறி அமர்ந்தேன். விமானம் மிக மிகச் சிறியது. 24 பேர் உட்கார கூடியது. ஆயினும் நாங்கள் ஐந்து பேர்தான் அதில் பயணம் செய்தோம். விமானம் அதிக உயரத்திலும் பறக்கவில்லை. குறித்த நேரத்தில் 9-04க்கு விமானம் பால்டிமோர் நிலையத்தில் இறங்கியது. இந்த விமான நிலையமும் மிகப் பெரியதாகவே இருந்தது. இந்த ஊர் இந்நாட்டுப் பத்தாவது பெருநகரமாம். இங்கும் பல வெளிநாட்டு விமானங்களும் இருந்தன. இங்கே பலரும் நாம் பஸ்சில் ஊருக்குஊர் பிரயாணம் செய்வதுபோல, விமானத் தில் பிரயாணம் செய்கின்றனர். கட்டணமும் இரயில்வே (முதல் வகுப்பு) அல்லது பஸ் கட்டணத்தைக் காட்டிலும் குறைவாகவே உள்ளதாம். எனவே எந்த விமான நிலையத் திலும் கூட்டம் இருந்தது. விமான நிலையத்தில் இறங்கி, என் பெட்டியுடன் வெளி யே வந்தேன். வந்து திரு. டாக்டர் பெரியசாமி அவர்கள் வீட்டிற்குத் தொலைபேசியில் பேசினேன். வீட்டரசியார் அவர்கள் பேசினார்கள். "வணக்கம் சொல்ல, ஐயா 8-45 க்குப் புறப்பட்டதாயும் விரைவில் வந்து விடுவார்களென்றும்