பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால்டிமோர் 26.4.85 171 வீட்டிற்கு வந்து உணவு கொண்டோம். அவர்கள் வேலையில் மூழ்கினார்கள். அவர்தம் செயலர் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வர்மாட்டார்களாகையாலும் மாதக்கடைசியாக உள்ளமையலும் நிறையமுடிக்கவேண்டிய வேலைகள் இருந்தன. நான் சற்றே படுத்து உறங்கி, பிறகு "T.V. பார்த்துக்கொண்டும் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தேன். திரு. பெரியசாமி அவர்கள் தம் பிள்ளைகளுடன் (3 பெண்கள் ஒருவர் சென்னையில் மருத்து வக் கல்லூரியில் பயல்கிறார்.) வேறு இரண்டு பையன்களை வளர்த்து, கல்வி அளித்துப் பாதுகாக்கிறார். அவர்களும் மாலை வீட்டுக்கு வந்து சொந்தப் பிள்ளைகள் போலவே கலந்து பழகிய காட்சி என்ன்ை. மகிழ்வித்தது. இத்தகைய நிலையில் நம் நாட்டில் உள்ள பெருஞ் செல்வர்கள் மற்ற வரை அணைத்துப் போற்றினால் நாட்டில் ஒரளவு வறுமை குறைந்து வாழ்வு சிறக்குமே என எண்ணினேன். - பின் மாளிகையைச் சுற்றியுள்ள புல்வெளிப்பக்கம் சென் றேன். அங்கே பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் பயிலும் மாணவன் ஒருவன் மின்வெட்டியினால் புல் செதுக்கிக்கொண் டிருந்தான். நேற்றுப் பல்கலைக் கழகத்திலே பல மாணவர் கள் உழைத்துச் சம்பாதித்துப் பயில்வதைக் கண்ட நான் இங்கே பள்ளிப் பிள்ளைகளும் அவ்வாறு செயல்படுவதை அறிந்து மகிழ்ந்தேன். இளமையிலேயே இவ்வாறு பழக்க முற்படுவதாலேயே பின் அவர்கள் தம் காலில் நிற்கப் பழகிக் கொள்கிறார்கள். - சுற்றுச் சார்புகள் இயற்கைவளத்தோடு அமைந்த நிலை யில் என்னை மறந்திருந்தேன். ஆறு மணி அளவில் திரு. பெரியசாமி அவர்கள் நகர்நலம் காணப் புறப்படலாம் என்று காரில் அழைத்துச் சென்றார். ஊர் நடு சுமார் 15 கல் தொலைவு இருக்கும். சாலைகளில் விரைந்து வண்டிகள் பறந்தன. விதிகளை மீறியவர்களையும் மெதுவாகவோ வேக மாவோ செல்பவர்களையும் (45 க்குக் குறைந்து 70க்கு மேலாக) அங்கங்கே காவல் துறையினர் நிறுத்தி, அங்கேயே