பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ஏழு സ്റ്റേഷൻ எழுபது நாட்கள் தண்டம் இட்டு (40 அ50 டாலர்) அனுப்புகின்றனர்.நம்ஊர் போல, பின் அதற்காகச் சில நாட்கள் நீதிமன்றம் சென்று பொழுதினைப் போக்கும் வழக்கம் இங்கே இல்லை. நகரின் பல பாகங்களையும் காட்டிக்கொண்டே நடுமத்தியில் முக்கியமான இடத்தில் காரை நிறுத்தி, என்னைச் சுற்றிக் காண அழைத்துச் சென்ருர் வழியில் ஒரு மருந்தகத்தை காட்டினர். உலகிலேயே மிகப் பெரிய தாகவும், எங்கும் நீக்க முடியாத வியாதிகளையெல்லாம் நீக்கும் நிலையில் செயலாற்றுவதாகவும் உள்ள இந்த மருந்த கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர். திரு. மு. கருணாநிதி வைத்தியம் செய்து கொண்டாராம். நம் முதல்வர் அவர்கள் நியூங்ார்க் நகரில் தங்கி மருத்துவம் பெற்ற மருந்தகத்தை அங்கே கண்டேன். உலகிலேயே உயர்ந்த இந்த மருந்தகத்தே 30,000 பேர் பணிபுரிகிறார்கள் என அறிய அதன் நிலை உணர்ந்தேன். பின் அங்கே கப்பல் கள் தங்கும் இடம் சென்றோம். அதுவே நகரின் முக்கிய பகுதியாம். இன்று பதவியிலுள்ள நகரத்தந்தை அவர்கள் கடந்த பதின்னந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து இந்த ஊரையே வளப்படுத்தினாராம்-வளப்படுத்தி வருகிறாராம். நாங்கள் நின்ற அந்த இடம் காடாக இருந்த நிலையை மாற்றி, இந்த நகரத் தந்தையே அவர் பதவியேற்ற தும் வெளிநாட்டு உள் நாட்டுச் செல்வர்களையும் பிறரை யும் வரவழைத்து, எல்லா உதவிகளையும் செய்து, இங்கே பல அடுக்குகள் கொண்ட பல கட்டிடங்களை அமைத்து, சிறந்த வணிக நிலைக்களனாகச் செய்ததோடு, ஆழ்கடலி லிருந்து கப்பல்கள் வந்து தங்க வேண்டிய துறைமுக வசதி. யும் செய்து, நாட்டுப் பொருளாதாரத்தை வளர்த்து வருகிறாராம். எனவே அவர் தொடர்ந்து பதவி வகிக்கிறார் போலும். அங்கே ஒரு பக்கத்தில் ஒரு பழைய கப்பல் நிறுத்தப் பெற்றிருந்தது. அதுவே அமெரிக்க சுதந்திரப் போரில் உபயோகிக்கப்பெற்ற முதல் கப்பல் எனவும் அதை, எங்கோ கடல் அலைகள் இடையிலிருந்து இங்கே கொண்டு வந்து செப்பனிட்டு, காட்சிப் பொருளாக வைத்து, அதன்