பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 27-485. இன்று காலை முறைப்படி எழுந்து, கடன்களை முடித்துக் கொண்டு குறிப்பினை எழுதி முடித்தேன். இங்கே எல்லாவிடத்திலும் எல்லோரும் காலை 7 மணிக்கு முன் எழுந்திருப்பதில்லையாதலால், என் கடன்களை முடித்துக் கொண்டு, குறிப்பு எழுதி முடிக்க வசதியாக உள்ளது. இன்று காலை திரு. பெரியசாமி அவர்கள் தம் மாளிகையின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சற்றே உலாவினேன். தோட்டங்களுக்குத் தண்ணீர் சுற்றிப் பாய்ச்சி, புல்வளர்க்கச் சுழல்குழாய் பயன்படுத்துகின்றனர். தோட்டத்தின் நடு வரையில் தண்ணிர்க் குழாய் வருகிறது. அங்கே சுழல்மேல் குழாயைப் பொருத்திவிட்ட்ால், அது சுற்றிக்கொண்டே சுமார் முப்பது அடி சுற்றி, தண்ணீர் தெளிக்கிறது. அழகாக வும் உள்ளது: பணியும் சுலபமாக முடிகிறது. நம் பள்ளியின் முன்பக்கத்தே (இரு இடங்களிலும்) இவ்வாறு அமைத்தல் நலமாகுமே என எண்ணினேன்) தோட்டத்தில் ஓர் அணில் ஒடி ஆடித் திரிந்தது. சற்று பெரியதாக (பெருச்சாளி அளவு) இருந்தது. வாலைத் தூக்கித் தத்தித்தத்தி தோட்டம் முழுதும் சுற்றி இரை தேடித் தின்றது. அதை உற்று நோக்கி னேன். அதன் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகள் இல்லை. அத்தகைய அணிலை நான் இதுவரையில் கண்ட தில்லை; எனவே அது அணில்தானா எனக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அணில் என்று திட்டமாக அறிந்த பின் சிந்திக்கத் தொடங்கினேன். நம் நாட்டில் உள்ள னில்களின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகள்