பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 76 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இருக்கும். அதுபற்றி என் இளம் வயதில் என் பாட்டி காமாட்சி அம்மாள் சொன்ன கதை நினைவுக்கு வந்தது. இராமர் அணைகட்டும்போது, குரங்குகள் பெரிய மலைகளை யெல்லாம் கொண்டுவந்து இட்டு கடலைத் தூர்த்தன. அவற்றைக் கண்ட அணில் தானும் ஏதேனும் தொண்டு செய்யவேண்டும் எனக் கருதிற்றாம், உடனே நீரில் தன் உடலை நனைத்து, பின் மணலில் புரண்டு, மறுபடியும் ஒட்டிய மணலைக் கடலில் கரைத்து மறுபடி மறுபடி வந்து மண்லில் புரண்டு செல்லுமாம். இதன் அன்பினைக் கண்ட இராமர் அதை அழைத்து அதன் முதுகைத் தன் கையால்விரல்களால் தடவிப் போற்றினாராம். அவர்கள் மூன்று விரல்படிந்த இடங்களே பின் வெள்ளைக் கோடுகளாயின என்று என் பாட்டி சொல்லி, அந்தக் கோடுகள் வழிவழியாக அணில் வருக்கத்துக்கே அமைந்து விட்டன என்றனர். நான் அதுபற்றி அப்போது அதிகம் சிந்திக்கவில்லை. எனினும் பின் ஆழ்வார். பாசுரங்களைப் படிக்கும்போது-தொண்டரடிப் பொடியாழ்வார் அவர்கள் திருமாலையில் குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடித் தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன், என்று பாடிய அடிகளைப் படிக்கும்போது, அது வெறும் கதையா யினும், ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று நினைக்கத் தோன்றிற்று. ஒரு வேளை அமெரிக்க அணில்கள் இராமர் நாட்டைவிட்டு நெடுந்துரம் அப்பால் இருக்கின்றமையின் அவைகள் அப்பேறு பெறவில்லையோ என எண்ணினேன். அன்றி, காட்டுப்பன்றி, காட்டு எருமை, காட்டுநாய் (ஓநாய்) காட்டுஎலி போன்று இதுவும் காட்டு அணிலாக அவ்வாறு இருக்கிறதோ என 'எண்ணினேன். மேலும் கடல்துார்க்க உழைக்காது நின்ற காரணத்தாலே நம்நாட்டு அணிலைப் போன்று இளைக்காது, சற்று பெரிதாகவே உள்ளதுவோ எனவும் நினைத்தேன். எப்படியாயினும் ஆ ழ் வாரி ன் பாசுரத்தை இந்த அமெரிக்க மண்ணில் நினைக்க வைத்த அந்த அணிலுக்கு என் நன்றியைச் செலுத்தி உள்ளே வந்தேன். . - 强