பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 27.4.85 #77 திரு. பெரியசாமியின் வீட்டரசியார் அவர்கள், இன்று விடுமுறையாதலால், வீட்டுக்குத் தேவையான வாரப் பொருள்களை வாங்கிவரக் கடைக்குப் புறப்பட்டனர். அவர்கள் இருப்பது புறநகர்ப் பகுதியாகையால் குறைந்தது மூன்று கல் தள்ளியுள்ள கடைப்பகுதிக்குச் செல்லவேண்டு மாம். நம் நாட்டைப்போல கண்ட இடத்தில் கடைகளும்சாக்கடையின் பக்கத்தில் பலகாரக் கடைக்ளும்-சாலை களையும். பள்ளியின் வாயில்களையும் அடைக்கும் கடைகளும், தெருக்கடைகளும் இங்கே கிடையா. திருமதி. பெரியசாமி அவர்களும் பணிபுரிவதால், தனியாகக் கார் ஒட்டும் திறம் பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்களுடன் கடைக்குக் காரிலேயே சென்றேன். ஒரு பெரிய கடையுள் புகுந்தனர். அதில் தேவையான எல்லாப் பொருள்களும் (புறஉடை தவிர்த்து) முறையாக வரிசைப்படுத்தி வைக்கப்பெற்றிருந்தன. இங்கே எங்கேயும் அங்கங்கே சாமான்களை நிறுத்தோ அளவிட்டோ தந்து பின் பில் போடும் வழக்கம் இல்லை. தள்ளுவண்டிகள் நிறைய வாயிலில் இருக்கும். வருபவர்கள் அவற்றுள் ஒன்றை எடுத்துக்கொண்டு, தமக்கு வேண்டிய பொருள்களை-பழம் காய்கறி முதல்-பருப்பு, சோப்பு, பதப்படுத்திய உணவுகள் ரொட்டி முதலியன யாவையும், வேறு சமையல் பொருள் வாசனை, பூசுப்பொருள்கள் பிற அனைத்தும் எடுத்து அதில் வைத்துக்கொண்டு, மறுபடியும் வாயிலுக்கு வரவேண்டும். அங்கே "கியூ' வரிசைப்படி நிற்க, ஒருவர் மிக விரைவில் கணிப்பொறி வழியே (computer) பில் தாயாரித்துத் தொகையைப் பெற்றுக்கொண்டு வெளியே அனுப்புவார். அம்மையார் அவர்கள் சுமார் ஒருமணி நேரம் சுற்றி உழன்று (கடைபெரிய மண்டப அளவில் சுமார் 120-80 பரப்பில் இருந்தது) வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, வாயில் வந்து பில் இட்டுப் பணம் தந்ததைக் கண்டு வந்தேன். சாமான்களை ஒரு சிறு இயந்திரத்தின்மேல் ஒன்றன்பின் ஒன்றாக வைக்க, பக்கத்தில் கணிப்பொறி அததற்குரிய ஏ.-12 . :