பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் விலையினைப் பட்டியலில் இட்டு, மொத்தமாக்கித் தருகிறது. விலையில் குறைத்தலோ ஏமாற்றலோ இல்லை. எனவே. இந்த முறை நல்லதாகவும் தெளிவாயும் உள்ளது. வீட்டுக்கு வந்து சுமார் 10 மணி அளவில் காலைச் சிற்றுண்டி (நல்ல இட்டலி) உட்கொண்டு வாஷிங்டனுக்குப் புறப்பட்டோம். திரு. பெரியசாமிக்கு வேண்டிய அன்பர் குடும்பத்துடன் அங்கே (வெளியூரிலிருந்து) வருவதாகவும் அவரை அழைத்து வருமுன் என்னை அங்கே திரு. சதானந்தம் அவர்களிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார். திரு. சதானந்தம் அவர்களிடம் நேற்று மாலையே பேசி, குறிப்பிட்ட இடத்தில் ஒருமணிக்கு வந்து இருக்குமாறு சொல்லியுள்ளார். எனவே, நானும் பால்டிமோரிலிருந்து பிள்ளைகளிடம் விடைபெற்றுக்கொண்டு, திரு. பெரியசாமி அவர்தம் காரில் புறப்பட்டேன். துணைவியாரும் மற்றொரு வரும் உடன் வந்தனர். வழி நெடுகத் தமிழ் பற்றியும் சமயம் பற்றியும் அம்மையார் பல கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தனர். கார்களில் பாட்டுகள் பாடும் வகையில் 'ரேடியோ' கேஸெட் அமைப்பு இருந்ததால்-வழி நெடுகச் சீர்காழி கோவிந்தராசன் பாடிய பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டே செல்லவும் முடிந்தது. சுமார் 1மணி அளவில் அமரிக்கத் தலைநகராகிய வாஷிங்டன் அடைந்தோம். இந்த நாட்டில் சாலைப் பயணம் இதுவே முதல் தடவை. எனவே அதில் செல்லும் வழியில் எப்படி இந்நாட்டு மக்கள் விரைகிறார்கள் என்பதைக் காண முடிந்தது. சுமார் 50 கல் தொலை இடைவெளி யிருந்தது. சாலைகள் அழகுற இருபகுதிகளாக, இரு புறங்கள் செல்ல அமைந்திருந்தன. குறுக்கே யாரும் புகுந்து கடக்க முடியாது. குறிப்பிட்ட ஒருசில இடங்களில்தான் - அதிலும் வேறு பக்கமாகப் புறத்திலே சென்றுதான் வரமுடியும். டிரக் வண்டிகள் - கார்கள் - விரைந்து ஒடிக்கொண்டிருந்தன. ஒரு கல் தொலைவில் சுமார் 500 வண்டிகளைக் கடந்திருப்போம். இன்று விடுமுறை - இல்லையானால் இன்னும் அதிகம் இருந்