பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 27.4-85 | 79 திருக்கும் போலும். இங்கே அனைவரும் காரில் விரைந்து பயணம் செய்கின்றனர். "பஸ் போக்குவரத்து, நகர எல்லைக்குளன்றி வெளியே ஊருக்கு ஊர் பெரும்பாலும் இருக்காது. இரெயில்கள் ஒடுகின்றன. சாலையின் விதிகளை ஒழுங்காக அனைவரும் பின்பற்று கின்றனர். சாலையின் ஒரு பக்கத்தில் நான்கு வரிசைகளில் ஒருசேர வண்டிகள் செல்லலாம். வேறு மெதுவாகச் செல்லும் மாட்டு வண்டிகளோ பிறவோ எங்கும் கிடையாது. அங்கங்கே ஒளி விளக்குகள் (பச்சை.சிகப்பு) தடை இன்றிச் செல்லக் குறியிட்டுக் காட்டுகின்றன. பெரும் பலகைகள், வழிகளின் போக்கு- பக்கத்தில் உள்ள பகுதி முதலியனவற்றை நன்கு விளக்குகின்றன; சாலையின் நடுவி லேயே - உயரத்தில் - ஒட்டுபவர் கண்முன் காணும் வகை யில் பெரிய எழுத்தில் பலகைகள் இடப்பெற்றுள்ளன. எனவே போக்குவரத்து எளிமையாகின்றது. இத்துடன் இருபுறமும் இயற்கைக் காட்சிகள் - அடுக்கடுக்கான உயரிய மரங்கள் கண்ணுக்குப் பசுமை தருகின்றன. எங்கும் விளம்பரப் பலகைகளைக் காணமுடியவில்லை. இவற்றை யெல்லாம் கண்டு கொண்டே - இடையிலுள்ள ஒரு Lá)&6yovó&ρά άς) 5uqlh (Mary Land University) &ςίτ® கொண்டே - வாஷிங்டனில் குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே திரு. சதானந்தம் அவர்களும் திரு. பெரியசாமி அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டியவர்களும் வந்திருந்தனர். என் பெட்டி, பையை இடமாற்றி, அனைவரிடமும் பிரியா விடை பெற்று. திரு. சதானந்தம் அவர்கள் காரில் (Van) ஏறி அவர் இல்லத்துக்குப் புறப் பட்டோம். 密 * இது தலைநகர். சில முக்கியமான இடங்களை பாராளுமன்றம் கூடும் இடம், பிற தூதுவர் தங்குமிடம் ஆகியவற்றை முன்பே திரு. பெரியசாமி அவர்கள் காட்டிக் கொண்டே வந்தார்கள். கடைசியில் பிரியும்போதும், இந்நாட்டில் எங்கிருந்தாலும் - எது தேவையானாலும்