பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தயங்காது தொலைபேசியில் சொல்லுமாறும் வேண்டிய இடத்தே வேண்டியது பெற ஏற்பாடு செய்வதாகவும் கூறி அன்புடன் பிரிந்தார். பின் சதானந்தம் அவர்களும் நகரின் வேறு சில பகுதிகளைக் காட்டிக் கொண்டே, மற்றொரு பக்கத்தே உள்ள புறநகர்ப் பகுதியில் இருக்கும் தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். இவர்தம் தந்தையார் - ஆந்திர நாட்டில் அனந்தப்பூரில் இப்போது இருப்பவர் - வடமொழி தெலுங்கு இரண்டிலும் வல்லவர். என்றும், அவர் பல பாடியுள்ளார் என்றும் கூறி, ஒரு வட மொழிச் சுலோகம் அடங்கிய 'கெஸ்கேட் இட்டு, வழிநெடுக இறையருள் பரப்பும் இன்ப ஒலியைக் கேட்டு மகிழும் பேற்றினை அளித்தனர். திரு. சதானந்தம் அவர்கள் ஆந்திரர் அனந்தபூரைச் சேர்ந்தவர். எனவே தமிழ் அதிகம் தெரியவில்லை. அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். அவர்தம் துணைவியார் அவர் தம் தாய் தந்தையர், தம்பி அவர் மனைவி ஆகியோர் இருந்தனர். அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்: எனவே நல்ல தமிழில் பேசினார்கள். அனைவரும் அன்போடு பழகினார்கள். டாக்டர் பட்டம் பெற்று, மேல்படிப்பிற்காக இங்கே \ வந்திருக்கும் திரு. சதானந்தம் தம்பியும், நம் சென்னை சின்மயா பள்ளியில் பயின்ற மகளும் இருந்தனர். அவர்களுக்குத் தமிழ் அதிகம் வரவில்லை. மாமனார் அவர்கள் 1922ல் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர்; விசிட்டாத்வைதி - நல்ல படிப்பாளி. வயது 81. அனைவரும் என்னிடம் அன்பும் பரிவும் காட்டிப் பழகினர். பகல் உணவு கொண்டு ஒய்வு பெற்றேன். பின் பெரியவர் என்னுடன் சமயம் பற்றிய ஆய்வுகளைச் செய்து கொண் டிருந்தார். இன்று மாலை ஆறு மணி அளவில் பக்கத்தில் மற்றொருவர் வீட்டில் பஜனை நடக்கிறதெனவும் அனைவரும் செல்ல வேண்டும் எனவும் நானும் வரவேண்டும் எனவும் கூறினர். அமெரிக்க நாட்டில் நம் சமய மரபுப்படி நடைபெறும் பஜனையை விடுவதா? உடன் புறப்பட இசைந்