பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C);27.4.85 181 தேன். மாலை 5.30க்கு அனைவரும் புறப்பட்டோம். திரு, சதானந்தம் அவர்கள் மைத்துனர் வயலின் வாசிக் கிறார்; அவர் தம் மனைவியுடன் முன்னே சென்றார். பக்கத்தில் என்ற உடனே நான் அடுத்து எங்கேனும் இருக்கும் என நினைத்தேன். ஆனால் நாங்கள் புறப்பட்டு நெடுநேரம் பயணம் செய்தோம். எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. சுமார் : மணிநேரம் பயணம் - விரைந்த காரில் அமைந்தது. நான் மெல்ல எவ்வளவு தூரம் இருக்கும் என்றேன். 40 கல் தொலைவு என்றனர். நாம் சென்னையி லிருந்து காஞ்சிபுரம் செல்லும் அளவு. அத்தகைய தூரம் இங்கே அதிகமாகத் தெரிவதில்லை. நல்ல கார் - சிறந்த சாலை . முறையான ஒட்டும் நிலை . நம் ஊர்க்காரர். பல விடங்களில் சிதறியுள்ளனர். எனவே எப்போதாவது - வாரத்துக்கு ஒரு முறை - மாதத்துக்கு ஒரு முறை . இவ்வாறு கூடுதல் மரபு என்றனர். இந்த ஊரிலே நம் சமயத்துக்கு எனப் பெரிய கோயில் ஒன்றும் இல்லை. என்றாலும் இவ்வாறு அன்பர்கள் அடிக்கடி கூடி, தெய்வ இசை பாடி மகிழ்கின்றனர். இங்கே உள்ள தெலுங்கர்கள் பலரும் தமிழர் சிலரும் கன்னடவர் சிலரும் - வடநாட்டவர் ஒரிருவரும் அந்தப் பஜனைக்கு வந்திருந்தனர். அனைவரும் காராளரே! எனவே வந்து போவது எளிது. அந்த வீட்டின் அடித்தளத்தில் அழகிய அகன்ற அறையில் வெங்கடேசனின் பெரிய படத்துக்கு எதிரே பூசனைப் பொருள்கள் பல வைக்கப் பெற்றிருந்தன. பூரீராம் என்ற அவ்வீட்டுத் தலைவர் தமது துணைவியாருடன் அனைவரையும் வரவேற்றார். எல்லோரும் பணி புரிபவர்கள், மாதம் 3, 4, ஆயிரம் டாலர் (50,000 ரூபாய்) சம்பளம் பெறும் உயர் உத்தியோகத்தர். எனினும் இறைவழிபாட்டில் ஒன்றுகூடித் தம்மை மறந்து நிற்கின்றனர். திரு. சதானந்தம் அவர்கள் மைத்துனர் அழகாக வயலின் வாசித்தார். முதலில் அனைவரையும் வரவேற்று, பாடுபவர் யார் யார் எனக் கூறி, முறையாகப் பஜனையைத்