பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தொடங்கினார். பக்கவாத்தியம் தபலா, இருந்தது. கைத் தாளம் முதலியனவும் இருந்தன. முதலில் இரு ஆடவர் அழகாக - உருக்கமாகப் பாடினர். நான் இந்த அமெரிக்க நாட்டில் இத்தகைய தெய்வநலம் சான்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என எண்ணவேயில்லை. பிட்ஸ்பர்க்கில்' வேங்கடவன் கோயிலில் அத்தகைய தெய்வநலம் கூட்டும் என நம்பினேன். ஆயினும் இத் தலைநகரிலேயே அன்பர் சதானந்தம் அவர்களால் இந்த நல்ல வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. - பாடல்கள் பெரும்பாலும் தெலுங்கில் இருந்தன. இரண்டொரு வடமொழிச் சுலோகங்கள். ஒரு கன்னடப் பாட்டு.மொழிகளை ஒரளவுதான் நான் புரிந்துகொண்டேன். எனினும், அவர்கள் உணர்வோடு பாடிய காரணத்தால் நான் உண்மையிலேயே உணர்வழிந்து நின்றேன். அன்னை பராசக்தியைப்பற்றி அனைவரும் பாடினர். பின் ஒரு அம்மையார் மிக உருக்கமாக நான்கைந்து பாடல்கள் பாடினர். பொருள் பொதிந்த உருக்கமான பாடல்கள். அவர் ப்ாடுமுன் பாட்டினைப் படித்து, அதற்குரிய விளக்கத்தின்ை ஆங்கிலத்தில் தந்து பின் இசையொடு பாடியதால் மிக எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரும் ஹார்மோனியம் வைத்துக்கொண்டே பாடினர். நம் ஊரில் இந்த முறை அருகி வருவதைக் கண்ட எனக்கு, என் இளமையில் ஹார்மோனிய'த் துடன் பாடிக் கேட்ட மரபு நினைவுக்கு வந்தது. தனிக் கச்சேரிகளிலும் நாடகத்திலும் இதுவே முக்கிய இடம் வகிக்கும். வெறும் சுருதிக்காக மட்டுமன்றி, அதிலேயே சுர' மீட்டிப் பாடிக் காட்டும் மரபும் உண்டு. அதை இன்று இங்கே கண்டேன். திரு. சதானந்தம் அவர்கள் மைத்துனர் தனியாக தியாகராஜர் கீர்த்தனங்களையும் பிறவற்றையும் தம் வயலினில் குழைத்துப் பாடி அனைவரையும் பதுமை களாக்கிவிட்டார். அவர்தம் வயலின் இசை மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. கடைசியாக ஓர் அன்பர்