பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 27.4.85 183 திரு. தியாகராஜர் கீர்த்தனையைப் பாடினார். முதலில் அவரிடம் பேசியபோது அவர் தஞ்சாவூர்காரர் என்றும் தமிழர் என்றும் திருவையாறு சென்றுள்ளார் என்றும் அறிந்தேன். பெயர் ராஜி' என்றும் தமக்கு அறிமுகமான நம் பேட்டையிலுள்ள (அமைந்தகரை) சாவி’க்கு வேண்டியவர் என்றும் திருப்பி நாடு செல்லும்போது அவரிடம் தன்னைப் பற்றிச் சொல்லுமாறும் கூறினார். இரவு உணவுக்குப்பின் திரும்பினோம். வழி நெடுக அந்த வேளை யிலும் காரோட்டம் குறையவில்லை. ஒரு கல்லுக்குக் குறைந்தது 300 கார்களைக் கடந்திருப்போம். இராப் பகலற்ற நாடாக இது விளங்குகிறது போலும். இதைத்தான் தேவேந்திர லோகம் என்பர்களோ! வரும் வழியில் திருமதி. மிருணாளினி சதானந்தம் அவர்கள் இனிமையாகப் பாடிக்கொண்டே வந்தனர். இரவு 12 மணிக்கு விடுவந்து படுத்து உறங்க ஆரம்பித்தேன்.