பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 28.4.85 இன்று காலை கண் விழித்து, கடன்முடித்து, குறிப்பு எழுதினேன். இன்றிலிருந்து (ஏப்பிரல் கடைசி ஞாயிறு தொடங்கி) அமெரிக்காவில் ஒருமணி நேரம் முந்தி. செல்லுமாம். காலை 6 மணியினை 7 மணியாக மாற்றி வைத்தனர். (பின் அக்டோபர் கடைசி ஞாயிற்றுக்கிழமை யில் இது திருப்பப் பெறுமாம்.) இந்த மணி அடிப்படை யிலேயே பணிமனைகள் இயங்குமாம். பகல் காலம் நீண்டுள்ள காலமாதலால் (உதயாதி நாழிகையில் நாம் பல செயல்கள் செய்வது போல) அந்த உதயகாலத்தை ஒட்டியே எல்லாப் பணிகளும் நிகழும் போலும். மாலை அதிகநேரம் ஒய்வு; இருப்பினும் பின் பகுதியைப்பற்றி அரசாங்கம் கவலைப்படுவதில்லை. அவரவர் சொந்த வேலைகளைக் கவனிக்கலாம். இன்று இந்திய வழிபாட்டு கூடத் (Indian House of Worship) தில் ஒரு கூட்டம் உண்டென்றும் 'அத்வைதம்’, ‘துவைதம்’ விசிட்டாத்வைதம்’ எனும் பொருள்கள் பற்றிப் பேசுவார்களென்றும் திரு. சதானந்தம் அவர்தம் மாமனார் விசிட்டாத்வைதம் பற்றிப் பேசுவார் என்றும், நானும் அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். நானும் மகிழ்வுடன் இசைந்தேன். விசிட்டாத்வைதத்தை உலகுக்கு அளித்த இராமாநுஜர் என் ஊர்க்காரர் அல்லவா! உடையவராகிய அவர் நம் பூரீபெரும்புதூரில் ஞாயிறாகப் பிறந்து உலகுக்கு ஒளிதந்தவரல்லவா! எல்லோரும் வாருங்