பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 28.4.85 - 185 கள்' எனஅழைத்து, வைணவத்தை அனைவருக்கும் உரிமை யாக்கியவ ரல்லவா! எனவே அனைவருடன் நானும் செல்ல இசைந்தேன். நேற்று மாலையைப் போலவே இன்றும் சுமார் 45 கல் காரில் செல்ல வேண்டியிருந்தது. காலை 11 மணிக்கு நிசழ்ச்சி. எனவே நாங்கள் 10 மணிக்கே புறப்பட்டோம். அங்கே பெரும்பாலும் குஜாரத்தி மக்கள் - பெண்கள் பெரும் பாலோர் . கூடியிருந்தனர். மொத்தத்தில் சுமார் 200 பேர் இருப்பர். முதலில் பஜனைகள் நடைபெற்றன. பின் மேலே நான் கூறியபடி ஒவ்வொரு ஆச்சாரியாரைப் பற்றியும் அவரவர் கொள்கைகளைப் பற்றியும் ஒவ்வொரு அன்பர் விளக்கிப் பேசினார். திரு. சதானந்தம் அவர்கள் மாமனார் (வயது 81) விஞ்சமூரி பார்த்தசாரதி ஐயங்கார் அவர்கள் இராமாநுஜரைப் பற்றியும் அவர் விசிட்டாத்வைதம் பற்றியும், விளக்கிப் பேசினார். (சங்கரரைப்பற்றிப் பேசியவர்மட்டும் குஜராத்தியில் பேசினார், மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடைபெற்றன.) அவர் இராமாநுஜர் செயல் களுக்கெல்லாம் மூலமாக இருந்த தமிழ் நாலாயிரம் பற்றியும் அவற்றைப் பாடிய ஆழ்வார் பன்னிருவரையும் பற்றி விளக்கி, இராமாநுஜர் தந்த தத்துவத்தை நன்கு விளக்கினார். பேசிய மற்றவர்களும் ஆழ்வார்களைப் பற்றியும் அவர்தம் பாடிய பாடல்கள் பற்றியும் தொட்டுக் காட்டியதொடு காஞ்சிபுரம், பெரும்பூதூர் பற்றியும் குறித்தனர். பேச்சுகளுக்கு இடை யிடை குஜராத்தியில் பாட்டுகள் சில பெண்கள் பாடினர். கூட்டமுடிவில் வழிபாடு நடைபெற்றது. அனைவருக்கும் நல்ல உணவும் தரப்பெற்றது. (இங்கே உணவு இல்லாமல் கூட்டம் இருக்காது போலும்) கூட்டமுடிவில் அந்தக் கூட்டத்தை நடத்தியவரான திரு ஷா என்பவரை அணுகி இத்தனை ஆச்சாரியர்களுக்கும் கொள்கைளுக்கும் விழா எடுக்கும் நீங்கள் ஏன் எங்கள் சைவ சித்தாந்தக் கொள்கை பற்றியும் அதன் ஆச்சாரியர்கள் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்டேன். அவர் உடனே, அது