பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பற்றித் தங்களுக்கு ஒன்றுமே யாரும் சொல்லவில்லையே. முன்னேயே சொல்லியிருந்தால் உங்களையே பேசச்சொல்லி இருப்பேனே என்று கூறியதோடு, அதுபற்றிச் சுருக்கமாறு எழுதித் தந்தால், திங்கள்தொறும் வெளியிடும் அவர்கள் இதழில் சேர்த்து வெளியிடுவதாகவும் கூறினார். நானும் நன்றிகூறி, திரு. சதானந்தம் அவர்கள் வழி இரண்டொரு நாளில் அனுப்புவதாகக் கூறினேன். அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் எஞ்சினியர் பயிற்சி பெற்று, இங்கே பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிசெய்வதாகவும் கூறினார். அவர்களிடமும் மற்றவர்களி டமும் விடைபெற்றுக்கொண்டு 2-30 மணி அளவில் புறப் பட்டோம். இந்த இரு நாள் சமய நிகழ்ச்சிகளிலும் ஆண்கள் கால் சட்டையும் மேல் சட்டையும் இட்டிருந்தாலும், பெண்கள் மட்டும் (அனைவரும்) நம்நாட்டு மரபுப்படி புடவை உடுத்து, முறைப்படி பொட்டும் பூவுமிட்டு வந்திருந்தனர். ஒருசில காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளும் தென்பட்டன. . திரு. சதானந்தம் அவர்கள் என்னை வேறு ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு சிறிய கோவில்: வீட்டினையே கோயிலாக மாற்றியுள்ளனர். திரு. சதா னந்தம் போன்றார் முயற்சியால் இந்த இடம் (சுமார் 1 ஏக்கர் - வீடுடன்) வாங்கப்பெற்று, கோயிலாக அமைக்கப் பெற்றதென அறிந்தேன். உள்ளே சிவன், பார்வதி, விநாயகர், முருகன், திருமால், இலக்குமி சரஸ்வதி முதலிய தெய்வங்களின் உலோகச் சிலைகளுடன், நவக்கிரகங்களின் செப்புச்சிலைகளும் இருந்தன. நவக்கிரகங்களுக்குச் செப்புச் சிலை இருப்பதை இங்கேதான் கண்டேன். கோயிலுக்கு வழிபாடியற்றும் அந்தணர் (ஐயங்கார்) காஞ்சியைச் சேர்ந்த (வ.ஆ) திருவத்திபுரம் பக்கத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டு கள் ஐதராபாத்தில் இருந்துவிட்டு, இங்கே பிட்ஸ்பர்க் வெங்கடேசர் கோயிலில் சில ஆண்டுகள் இருந்து, தற்போது