பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வளராமல் இருக்கும் நிலையினை எண்ணும்போது. உள்ளம் நைந்து சில எழுத்துக்கள் உருவாகி உள்ளன. அவை அனைத்தும் நம் நாடும் மொழியும் சிறக்கவேண்டும் என்று உள்ளத்தில் எழுந்தவையேயன்றி யாரையும் எந்த நெறியினையும் குறிைசொல்ல எழுந்தன அல்ல. தனி உடைமை, அரசுடைமை பற்றிப் பலவிடங்களில் ':44ள்ளேன். பிறநாடுகளில் போட்டி இருப்பதால்துவர் தக்க இடத்தில் அமர்த்தப் பெறுவதால்-பொது 'களுக்குத் தேவையானவை கிடைப்பதோடு, எல்லாச் செயல்களும் செம்மையாக நடை பெறுகின்றன. நம் இரட்டில் சாதாரணப் பொருள்களையும்கூட அரசாங்கம் விற்க வேண்டியுள்ளது. காரணம் என்ன? தனி மனிதன் அவற்றைப் பதுக்கி, இல்லாத சூழ்நிலையை உண்டாக்கி, தானே கொள்ளை லாப்ம் அடிக்கநினைத்தான். அதனைப் போக்கி, நியாய விலைக்குத் தர அரசாங்கம் நினைத்தது அவறு இல்லைதான். ஆனால் அதைச் செயல்படுத்துப வர்கள் தனி மனிதன் தரும் விலையைக் காட்டிலும் உயரும் வகையில் வழி செய்கின்றனரே! நியாயவிலைக் கடைகள் தவிர, நியாய எடைக் கடைகள் இல்லை என்னு மாறு பல கூட்டுறவுப் பண்டக சாலைகளே செயல்படு கின்றவே. இவற்றை ஒடுக்க, ஒழிக்க அரசாங்கம் சட்டம் இசய்யலாம். அதைச்செயல்ப்டுத்தும் பணியாளர்கள் செம்மையாக இயங்கவில்லையானால் நாடே வருந்த வேண்டியுள்ளது. இந்த இடையில் நேரும் குறைகளை அரசாங்கம் நீக்க வேண்டாமா! . சாலைகள் பிறநாடுகளில் செம்மையாக உள்ளனவே. ஏன் நம் நாட்டிலும் அவ்வாறு அமையக்கூடாது. Tolgate -Tax எனும் பாதை வரியினை இட்டுத் தேவையைச் செய் தால் நாடு - சாலை - அனைத்தும் நலமுறுமே. இந்த வரிபற்றிப் பலவிடங்களில் நூலில் குறித்துள்ளேன். அப் படியே சிற்றுார்கள் தாமே தம் வரியை வசூலித்து, அரசாங் கப் பொருள் உதவியின்றியே தம் எல்லாத் தேவைகளை யும் நிறைவேற்றிக் கொள்ளுகின்ற தன்மையினையும் காட்டியுள்ளேன். இவ்வாறு அவ்வந் நிலத்தவர் செயல்புரி