பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 28-4-85 - 89 அமரிக்கநாடு விடுதலை பெற்ற காலத்தில் சாசனக் கையொப்பமிட்டமை பற்றி, பிலடெல்பியா நகர் பற்றிக் கூறும்போது குறித்தேன். இது தலைநகர் அல்லவா! அதிலும் ஒரு தக்க தலைவரின் பெயரில் அமைந்த ஒன்றல்லவா, எனவே இங்கும் வெற்றிச்சின்னம் (1775) ஒன்று நாட்டி யுள்ளனர். ஓரிடத்தில் WATER GATE நீர்க்கதவு' என்றிருந்தது. அதை என்னவென்று கேட்டேன். அங்கே நிக்சன் என்பர் பெருந்தவறு இழைத்ததாகவும் அதைக் கொடுமை நிகழிடமாக மக்கள் வெறுத்து ஒதுக்குவதாகவும், அந்த பெயரைச் சொன்னாலே அதற்குரியவர் மிகக் கொடிய வராகக் கருதப் பெறுவர் என்றும் கூறினர். வெற்றிக்கு மட்டு மன்றி வேதனைக்கும் இங்கே ஒரு சின்னம் இருப்ப்தறிந்து அதைக்கண்டு வாழும் மக்கள் அத்தகைய கொடுமைகளைச் செய்யாது சமுதாயத்தை வாழவிடுவார்களா என நினைத் தேன் - ஆம்! வருங்கால மக்களுக்கு அச் சின்னம் நல்வழி காட்டும்ாக! - . நான் முன் பலமுறை சுட்டியவாறு இங்கும் ஒரு பேராறு ஊரின் இடையில் ஒடுகிறது. தண்ணீர் வற்றாது, விரைந்து செல்லுகிறது. அதன் தேக்கம் ஒரு பேரேரியாகக் காட்சி தருகிறது. அதை அடுத்துப் பல படகுத்துறைகள் உள்ளன. இன்று விடுமுறை யாதலால் அங்கே உண்மையில் கால் வைக்க இடமில்லை' கார் நிறுத்தவும் இடமில்லை. பக்கத் திலேயே மற்றொரு பெருவெளியில் கிரிக்கெட் மாட்சு" நடைபெற்றது. கூட்டத்திற்கும் கார்களுக்கும் கேட்க வேண்டுமா? சுமார் ; கல் தொலைவு கடப்பதற்கு 20 நிமிடங் களாயின. கார் அசைந்தது; மக்கள் கூட்டம் திரண்டுநின்றது. இவை தவிர்த்து வேறு சில முக்கியமான இடங்களையும் கண்டோம். நாட்டுக்கு உழைத்த நல்லவர்தம் சிலைகளை, யும் நினைவுச் சின்னங்களையும் எழுப்பி, இந்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள் என்பதை முன் காட்டினேன். அந்த 6ıf6045uìã) @60iä14 6ìr ¡)606] 60e (ylb (Lincoln Memorial) ஜாப்பர்சன் நினைவிடமும் (Jefferson Memorial) முக்கிய