பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மானவை. இத்தகைய பல நிலையங்களைக் கண்டு கொண்டே, வாஷிங்டன் பல்கலைக் கழகப் பக்கம் வந்தோம். நான் மேலே சொல்லியபடி இதுவும், தனியார் பல்கலைக் கழகம்; நல்ல தரமானதாம். மேல் சியேட்டல் (SEATTLE) வாஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு நான் செல்ல இருக்கிறேன். அங்கே கணிப்பொறிவழித் தமிழ் ஆங்கில அகராதி தயாராகிறது. ஆயினும் அதற்கும் இதற்கும் எத்தொடர்பும் இல்லை. இத்தகைய இடங்களைக் கண்டு கொண்டே இரவு 7.30 மணி அளவில் வீடு சேர்ந்தோம். முன்பின் அறியாத திரு. சதானந்தம் அவர்களும் அவர்தம் துணைவியாரும் என்னைப் பரிந்தேற்றுப் புரந்தோம்பும் நிலையினை எண்ணி எண்ணி வியந்து போற்றினேன். இரவிற்கு நல்ல மைசூர்க்கலவைச் சாதமும் (சாம்பார்) நல்ல தயிர்ச் சாதமும், ஊறுகாய்,தேங்காய்த் துவையல், மற்றொரு துவையல் ஆகியவற்றொடு அளித்தனர். அனைவரும் ஒருங்கிருந்து உண்டோம். அவர்தம் மாமனார் தென்கலையார்: விசிட்டத்வைதி: சாதனந்தம் வேதாந்தி, நானோ சைவ சித்தாந்தி. எங்கள் உணவுக்கிடையில் சமயம் பற்றிய வாதம் எழுந்தது. பேசிக் கொண்டே கையைக் கழுவாமலேயே அவரவர் கொள்கை யின் சிறப்பை ஆராய்ந்தோம். (நாள் தோறும் அவர்கள் இருவரும் இவ்வாறு தர்க்கம் செய்வது உண்டாம்). பேச்சு பலவகையில் சென்றது. நான் முடிவாக எல்லாக் கொள்கை களும் மக்கள் வாழ்வை வளம் படுத்தி, சமுதாயத்தை நேரிய வழியில் நடத்தி, தெய்வ நெறியை மலர வைக்கப் பயன் படுவனவே எனவும், பின்பற்றுவோர் வேகத்தால் சில வேளைகளில் தடுமாற்றம் உண்டாகிறதேனும் அனைத்தும் இணைந்து செல்லும் நெறியே தேவையான தென்றும் கூறினேன். உலகம், உயிர், உடையவன்' என்ற முப்பொருளின் உண்மை நிலையை உணர்ந்து, எல்லாரும், இன்புற்றிருக்க நினைக்கும்’ தெய்வநெறியே இன்று உலகுக்குத் தேவை என்ற உணர்வோடு சுமார் 11 மணி வரை பேசிக்கொண்டிருந்து பின் படுக்கச் சென்றோம்.