பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 29.4.85 இன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். வீட்டில் உள்ளவர் அனைவரும் அவரவர் பணிக்கெனக் காலை 7 ம்ணிக்கே புறப்பட்ட வேண்டியவர்கள். எனவே நானும் திரு. சதானந்தம் அவர்களுடன் சென்று, கனடா செல்ல (நயாகரா நீர்வீழ்ச்சி) அந்த நாட்டு இசைவு வாங்குவதற்கும் திரு. பெரியசாமி அவர்கள் கேட்டுக் கொண்டபடி கிளைவ் லேண்டு'க்குத் திரும்பி வந்து மாநாட்டில் கலந்து கொள்வ தற்கு சுவிஸ் ஏர்லைன்ஸ் இசைவு பெறுவதற்கும், ஆவன காணவேண்டும் எனப் புறப்பட்டேன். காலை ஒட்ஸ்கஞ்சி, காப்பி உண்டு புறப்பட்டேன். அங்கே அவருடனேயே அலுவலகம் சென்று பிறகு இந்த இடங்களையெல்லாம் கண்டு திரும்ப மாலையாகும் என்றதால் திருமதி சாதானந் தம் அவர்கள் பகலுக்கெனத் தனியாக உணவுப் பொட் டலங்கள் கட்டித் தந்தனர். அவர்கள் அன்பின் பண்பை அறிந்து வியந்து போற்றினேன். பின் அவருடன் அலுவலகம் சென்று, சிறிது நேரம் வெளியே வரவேற்பு அறையில் தங்கியிருந்தேன். அவர்கள் தம் அலுவலகம் சென்று முக்கிய பணிகளை முடித்து வந்தனர். அவர் தம் வீட்டிலிருந்து சுமார் 15கல் தொலைவில் அலுவகம் இருந்தது. அதே அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற மூவரும் இவரும் சேர்ந்து, ஒரே காரில் வந்து பணி முடித்து ஒரே காரில் திரும்பும் ஏற்பாடு இருந்தது. இன்று இவர் முறை; எனவே இவர் காரில் அவர்கள் வீடுகளுக்குச் சென்று. அவர்களையும் ஏற்றிக்கொண்டு வந்தார். இது