பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C)29.4.85 ís3 ஏற்பாடு. எனினும் அவர் என்னை வீட்டில் கொண்டு விட்டு, பிறகு அலுவல்கம் செல்வதாகச் சொல்லி வந்தார். எடுத்துச் சென்ற உணவுப் பொட்டலத்துடன் நான் வீடு திரும்பினேன். அவர்தம் துணைவியார் அந்த உணவுடன் வேறு சிலவற்றை யும் இட்டு உண்பித்தார்கள். அவர்கள் உணவு கொண்ட பிறகு அலுவலகம் புறப்பட்டார். அவர்தம் மாமனாரும் மாமியாரும் இங்கே இருந்தனர். துணைவியாரும் வேறு இடத்தில் (பள்ளியில்) பணி செய்கின்றவர்; எனினும் இன்று விடுமுறை பெற்று இருந்தார். உணவுக்குப்பின் அவர்கள் மூவருடன் பல்வேறு பொருள் களைப் பற்றி - சிறப்பாகச் சமயம், சமுதாய வாழ்வு இவை பற்றிப் பேசிக் கொண்டே இருந்தேன். பல நல்ல குடும்பங் களுக்கு அமைந்த சில பெரும் கருத்துக்களை அலசினோம். நன்கு பொழுது கழிந்தது; போனதே தெரியவில்லை. மாலைச் சிற்றுண்டி முடிக்கவும் திரு. சதானந்தர் வரவும் சரியாக இருந்தது. பிறகு அவர்தம் மகளாரை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் (பல்) சென்றார்கள். வீட்டில் கீழே தளம் செப்பனிடும் பணி நடைபெறுகிறது. அதைச் செய்பவர் ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்தவர் அந்நாடு அந்நியரிடமிருந்து விடுதலை பெற விழைபவர். அவர் காரில் Free Afganistan என்று பொறித்திருந்தார். எனவே கீழே சென்று பணிகளையெல்லாம் க ண் டே ன். ஒவ்வொன்றையும் - இங்கே வீடுகளெல்லாம் வெறும் மரத்தா லாகியது என முன்னரே குறித்துள்ளேன்-எவ்வாறு செய்கின்றனர் எனக் கேட்டறிந்தேன். பல விருந்தினர் இங்கே வந்து இவர் வீட்டில் தங்குகின்றனர். மே மாதத்தில் ஒரு பெரு நாட்டியக் குழு தங்க இருக்கிறது; சின்மயாநந்தர் வந்து தங்குகிருர். பிறகு இவர்தம் பெற்ருேர் (தற்போது அனந்தப்பூரில் உள்ளவர்) வந்து தங்குவர். அனைத்துக்கும் பயன்படும் வகையில் அதைச் சரிசெய்து - எல்லா வசதிகளும் பொருந்தச் செப்பனிடுகின்றனர். கூலி மிக அதிகம், சாமான் சளும் அப்படியே. செப்பம் எல்லாம் செய்ய அதற்கு மட்டும் I B سس r۰ته