பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் 8000 டாலர் (சுமார் 1 இலட்சம்) செலவாகும். அவர்தம் வேலைகள் சிலவற்றைக் கண்டு, பிறகு இரவில் உணவு கொண்ட பின் திரு. பெரியசாமி அவர்களுக்குத் தொலை பேசியில் தகவல் சொன்னேன். பாஸ்டனில் உள்ள சின்மயாவின் அன்னை பவுத்திராஜிக்கும் நான் வரும் நேரம் சொல்லி, அவர்கள் பள்ளிக்கு வந்து சிறப்பித்தமையெல்லாம் நினைவூட்டினேன். இரவு 10 மணிக்கு (புது நேரம்) உறங்கச் சென்றேன்.