பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C.) 30-4-85 இன்றைக்கு நான் எங்கும் வெளியில் செல்லவில்லை. ஒய்வாக வீட்டிலேயே இருந்தேன். எனது ஆடைகளை யெல்லாம் இயந்திரச் சலவையில் தூய்மை செய்து கொண்டேன். அம்மையார் அவர்கள் உடனிருந்து செய்து தந்தார்கள். (முன் ஒரு முறை இலண்டனில் தூய்மைசெய்யப் பெற்றன) பின் இங்குள்ள கல்வி நிலைபற்றியெல்லாம் எண்ண ஆரம்பித்தேன். திரு. சதானந்தம் அவர்தம் மகளார் இங்கே 5-ம் வகுப்பில் பயில்கின்றார் (W Grade). அவர் கள் பள்ளியில் நடைபெறும் பாடங்கள், முறைகள் பற்றிக் கேட்டறிந்தேன். (பள்ளியினை வெளியிலிருந்து கண்டேன்.) பள்ளியின் பஸ் வந்து அழைத்துச் செல்லுகிறது. அது தனியார் நடத்தும் பள்ளியன்று: அரசாங்கப் பொதுப்பள்ளி. எனினும் அதில் பயிலும் மாணவர் நன்கு பயிற்சி அளிக்கப் பெறுகின்றனர் (இம்மாணவி ஒராண்டு தமிழ் நாட்டில் ஒரு சிறந்த பள்ளியாகக் கருதப்பெறும் ஒன்றில் பயின்றவர்: எனினும் இரு நிலைகளின் வேறுபாடுகளைக் கண்டதால் மறுபடியும் இங்கேயே அழைத்துக் கொள்ளப் பெற்றார் போலும்.) பள்ளியில் ஆங்கிலம், கணக்கு, சமுதாய இயல் (Social Studies) அறிவியல் (Science) இவை கற்றுத் தருகிறார்கள். சிறு பள்ளியாதலால் (5 வது வரை) வேறு கைத்தொழில் முதலியன இல்லையாம். பெரிய பள்ளியில் சில விடங்களில் தொழில் சம்பந்தமான கல்வி இயல் இருக்கும் என்றனர். பள்ளியிலேயே பொறியியல் (Engineering), கணிப்பு நெறி