பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 30-4.85 193 எழுதலாம் என்ற நியதி உண்டு. தேர்வு எழுதுவதற்கு (பள்ளித்தேர்வாயினும் பிறவாயினும்) மேல் வகுப்புகளில் இத்தனை நாள் பள்ளிக்கூடம் வரவேண்டும் என்ற கட்டாயம் (Compulsory Attendance) Gaol-urg, usualangulayth சுதந்திரம் வழங்கும் இந்த நாட்டு அரசு, கல்வித்துறையிலும் இவ்வாறு பலவகையில் உரிமை வழங்கியிருத்தல் பாராட்டுதற் குரியது. திரு. சதானந்தம் அவர்தம் மாமனார் மாமியார் இருவரும் வீட்டிலே இருந்தனர். மற்றவர் அனைவரும் அலுவலகம் சென்றனர். எனவே என் எழுத்து வேலைக்கும் உணவுக்கும் இடையிலே, அவர்கள் இருவரும் பலப்பல பொருள்களைப் பற்றி பேசினர். இங்கே உள்ள "ஹரே கிருஷ்ணா இயக்கத் தினைப் பற்றிக் கூறினர். இங்கே அந்த இயக்கம் இரு பெரு வகையில் இயங்குகிறதென்றும் ஒன்று நான் நாளை செல்ல இருக்கும் பிட்ஸ்பர்க் அருகில் உள்ள புதுப் பிருந்தாவனம்’ என்றும் கூறி அதுபற்றி விளக்கினர். அங்கே 3000 ஏக்கர் நிலத்தில் (ஒரு சிற்றுாராக) சுமார் 800 அமெரிக்க குடும்பங் கள் இந்த இயக்கத்தில் தம்மை மறந்து பணியாற்றுகின்ற னர் என்றனர். அவருள் பல சிறந்த பொறியாளர், உயர்ந்த மருத்துவர், பிற துறை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ள னர் என்றும் அந்த ஊர் எல்லையில் அனைவரும் நம் ஊர் போன்றே, ஆடவர் 'வேட்டி அணிந்தும் மகளிர் புடவை கட்டியும் 'பிள்ளைகளில் ஆண்கள் வேட்டியும் பெண்கள் பாவாடை கட்டியும் மாத்திரம் உள்ளனர் என்றும், அவர்கள் நெற்றியில் கோபி சந்தணமும் குங்குமப் பொட்டும் உள்ள தோடு, நாவில் கிருஷ்ண இராம மந்திரங்கள் எப்போதும் "நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்று சுந்தரர் பாடியபடி இருக்கும் என்றும் இளம்பிள்ளை களும் அதற்கு விலக்கு இல்லை என்றும் சொல்லி, அந்தப் பிருந்தாவனம் உண்மையிலேயே பழைய பிருந்தாவனத் தையும் மக்கள் கோபிகளையும் ராதை ருக்குமணி களையும் கிருஷ்ணர்களையும் நினைவூட்டும் வகையில்