பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C)-30-4-85 201 நகரத் துப்புரவும் உண்டாம். வாரத்துக்கு இருமுறை மோட்டார் லாரி வருமாம். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குப்பைக் கூளங்களை கரிய பெரிய பைகளில் இட்டுத் தத்தம் வாசலில் வைத்திருப்பர். (நான் இதை முதலில் பாரிசில் கண்டபோது ஏதோ சாமான் மூட்டைகள் என நினைத் தேன்). வரும் லாரியில் அவற்றை எடுத்துப்போட்டுக் கொண்டு செல்வர். தெருக்கள் புழுதி இல்லாததாலும் வீட்டு எல்லைகள் பெரும்பாலும் புல் பரப்பாக உள்ளமையா லும் இவற்றில் குப்பை சேர்ந்தால் அந்தந்த வீட்டில் உள்ள வர்களே துப்புரவு செய்வதாலும் தெருக்களில் அதிக குப்பை கள் சேருவதில்லை. இவ்வாறு நகர ஆட்சியர் தூய்மை யினைப் பாதுகாக்கின்றனர். அவர்களிடமே கல்வி, நலத் துறை, சிறு சாலைகள், மக்கள் பிற தேவைகள் அனைத்தும் ஒப்படைக்கப் பெற்றுள்ளனவாம். அப்படியே ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிடமே அனைத்தும் உள்ளன. நம் நாட்டி லும் அவ்வாறு அனைத்தும் மாவட்ட ஆட்சியிடம் (District Boards) ஒப்படைக்கப்பட்டிருந்த காலம் உண்டு. நான் அப்போது அரசியலில் ஈடுபட்டவனாதலால் அத்தகை ஆட்சிக் குழுவில் உறுப்பினனாக மக்களால் தேர்ந் தெடுக்கப் பெற்றுப் பணியாற்றினேன். (1938-1944) ஆயினும் இன்று தமிழகத்தில் அந்த நிலையில்லை. பஞ்சாயத்து ஒன்றியங்கள் இருப்பினும் எல்லா அதிகாரங் களையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பெறவில்லை யல்லவா! இத்தகைய மாற்றங்கள் பற்றியும் பிற நிருவாகங்கள் பற்றி யும் பேசிக்கொண்டே ஒரு மணி நேரம் உலவிவிட்டு 8 மணி அளவில் வீடு திரும்பினோம். இந்நாட்டு நீதி பற்றியும் சிறிது நினைக்கத் தோன்று கிறது. யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானா லும் வழக்குத் தொடுக்கலாம். ஒரு பெண் தலையில் சில விரும்பத்தகாத வடுக்கள் (சிறுபுண்கள்) தோன்றியபோது, பல நாள்களுக்கு முன் ஒரு முடிவெட்டகத்தில் (Saloon) வெட்டிக்கொண்டமையே காரணம் என அதன் மேல்