பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பட்டேன்; இன்று 1-5.85 புதன் கிழமை. தனிமையாகப் புறப்பட்ட என்னுடன் நான் செல்லும் நாடுகள் தோறும் - முன்பின் கண்டறியாத கேட்டறியாத ஊர் தோறும், நான் எந்தவித இன்னலும் ஏக்கமும் அடையாதபடி ஆண்டவன் உடனிருந்தே என்னை இயக்கிக்கொண்டு, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வகையில் காண்பவரை எல்லாம் உற்றவராக - கேளிராக - சுற்றமாகக் காட்டி என்னை அணைத்து அழைத்துச் செல்லும் நிலையை எண்ணி அவனடி வணங்கிப் போற்றினேன். மேசைமேல் திரு. சதானந்தம் அவர்கள் பயிலும் இந்த நூலை என் கண்ணில் படவைத்து, படிக்கவைத்து, உணரவைத்து, தான் உடன் இருப்பதைத் தெளியவைத்து, இனியும் என்றென்றும் என் உற்றதுணை வனாய் - தலைவனாய் - அன்பனாய் - அனைத்து மா ய் என்னுடன் இருக்கப்போகும் பெருநிலையும் புரிய வைத்து எனை ஆட்கொண்ட அந்த இறைவனை - முருகனை - முழு முதலை நினைந்து நினைந்து போற்றி வணங்கினேன். பொழுது கழிந்து கொண்டே இருந்தது. - - இந்த ஊரைவிட்டுக் கிளம்புமுன் திரு சதானந்தம் அவர்கள் குடும்பத்தைப்பற்றியும் ஒரு சில சொல்லத்தான் வேண்டும். அமெரிக்காவில் நான் தங்கிய இடங்களில் திரு. இராதாகிருஷ்ணன், திரு. பெரியசாமி ஆகியோர் செய்யும் தொண்டுகளையும் பொதுநலப்பணிகளையும் அங்கங்கே குறித்துள்ளேன். இங்கே இவர்தம் குடும்பம் - உயர்ந்த அந்தணர் குடும்பம் - வைணவக் குடும்பம், நம் ஊர் போன்றே ஒன்றிய குடும்பமாக இருக்கக்கண்டேன். திரு. சதானந்தம் அவர்கள் நல்ல த ன் மை ைய த் திரு. பெரியசாமி அவர்கள் பால்டிமோரிலே கூறிப் பாராட்டி னார்கள். இங்கே வந்த பின் அவர்கள் பாராட்டு எவ்வளவு பொருத்தம் என்பது உணர்ந்தேன். பெற்ற தாய் தந்தையும் உற்ற மனைவியின் பெற்றோர், உடன் பிறந்தார், மனைவி யின் உடன் பிறந்தார் அனைவரையும் அணைத்துக் காக்கும் இவர் தன்மை எனக்குப் பழங்காலத்திய நம் நாட்டுக் குடும்ப