பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 1-5-85 207 வாழ்வை நினைவுறுத்தியது. அவர்தம் பெற்றோர் வயதானவர்கள் - 80க்கு மேல் இருக்கலாம் - வருவதற்கென, அதிக நடமாட்டமும் ஏறி இறங்கும் தொல்லையும் இல்லா மலும் இருக்க, அடித்தளத்தை முற்றும் மாற்றி அனைத்து வசதிகளையும் செய்து வைக்கின்றார். அதற்கென சுமார் 10,000 டாலர் செலவு என எண்ணுகிறேன். அவர்கள் வைதிக நெறியும் வழிபடு முறையும் குறைவுறா வகையில் இறைவழிபாட்டுக் கூடம் முதல், தனியாகச் சமைக்குமிடம், குளியலறை முதலிய எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர். அவர்தம் மாமன், மாமி இருவரும் தற்போது இங்கே உள்ளனர். மாமனாரும் சிறந்த வக்கீலாக இருந்ததோடு, சமய சாத்திரங்களையும் (விசிட்டாத்வைதி - தென்கலை) நன்கு பயின்று உள்ளனர். நான் இருந்த நான்கு நாட்களிலும் அவர் என்னிடம் பலபல உண்மைகளை விளக்கிப் பேசிய நிலை என்றும் மறக்க முடியாதது. திரு. சதானந்தம் அவர் கள் தந்தையாரும் வடமொழியிலும், தெலுங்கிலும் புலமை பெற்றவர். அவர் பாடிய இருமொழிப் பாடல்களையும் காரில் செல்லும் போதெல்லாம் போட்டுக்காட்டுவர். எனவே மொழி தெரியாவிட்டாலும் அவற்றின் இனிமையும் உணர்வும் நன்கு புரிந்தன. இவரும் சிறந்த சமயத் தொண்டர். எல்லா அறைகளிலும் வேங்கடவர் அலர்மேலு மங்கையின் படம் இருக்கும். காலையில் எழுந்து குளித்த பிறகே காப்பி குடிப்பர். குளித்ததும் இறைமுன் நின்று பாடுவர். பின் காப்பி, உணவு 7.15 மணிக்கு அலுவலகம். இடையில் விடுமுறை நாட்களில் சமயத் தொண்டு, என்னைப் போல் வருவார் போவாருக்கெல்லாம் வழித்துணை. பலசமயத் தலைவர் இசைக் கலைஞர், நடனக் குழுவினர், பிறர் இவர்கள் வீட்டில் வந்து தங்கிய படியே இருப்பார்களாம். சென்ற ஆண்டு சேலம் ஜெயலட்சுமி குழுவும் இங்கே தங்கினர். சின்மயானந்தர் வந்து தங்குவாராம். இடையில் குச்சிப்புடிநடனக் குழுவினர் (17 பேர்) சிலநாள் தங்குவராம். எனவே இந்திய நாட்டி விருந்து- தெலுங்கு தமிழ் பகுதியிலிருந்து-வருபவருக்குச்