பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 2.5-85 காலை முறைப்படி கடன்களை முடித்துக் கொண்டேன். காலைச் சிற்றுண்டிக்குப் பின் என்னை வேங்கடவர் திருக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். திரு. வள்ளி யப்பன் அவர்கள் அவர் பணியின் பொருட்டு காலை 7.30க் குள் புறப்பட்டுச் சென்றார். அவர் தனியாக மருத்துவம் பார்க் கின்ற போதிலும் ஒன்றுக்கு மேலான இடங்களில் நோயாளி களைப் பார்க்க வேண்டி இருந்ததால் ஒவ்வொரு இடத்திலும் குறித்த நேரத்தில் இருக்கக் கடமைப்பட்டவராவர். பிள்ளைகள் மூவரும் பள்ளிக்குச் சென்றனர். மூத்த மகள் கல்லூரி விடுமுறையாதலால் வீட்டிலேயே படித்துக் கொண் டிருந்தனர். பின் திருமதி வள்ளியப்பன் அவர்கள் தம் காரிலேயே காலை 10 மணி அளவில் என்னை வேங்கடவர் கோயிலுக்கு அழைத்துச் சென்று, தாமும் வழிபட்டு, என்னை அங்கேயே இருத்தி, தம் பணி மேற்சென்றனர். மாலை வரையில் வேங்கடவன் திருமுன்பே நான் வேண்டிய நிலை எண்ணி மகிழ்ந்தேன். மழையும் விடா பெய்து கொண்டிருந்தது. உள்ளே கருணை மழை வெளிே விண்ணின் மழை. திருப்பதியைப் போன்றே இத் திருவேங்கடமும் ப மலைகளுக்கு அப்பால், 'பென்' எனும் குன்றின் மேல் அழகு அமைக்கப்பெற்றிருக்கிறது. திருப்பதியின் தோற்றத்திற் முற்றும் ஒத்தவகையில் வேங்கடவன் நின்ற திருக்கோலத்தி காட்சி தருகிறான். அம்மை அலர்மேல் மங்கையின் சன்ன இறைவன் வலப்பக்கத்திலும், ஆண்டாள் சன்னதி இ