பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 2.5.85 213 பக்கத்திலும் அமைந்துள்ளன. இறைவனுக்கு நேர் எதிரில் கருடாழ்வாரும் அனுமனும் அமைந்துள்ளனர். இடையில் பெரிய மண்டபம், கீழே குளிர் தெரியாதவகையில் திண்ணிய விரிப்புடன் உள்ளது. வெளியே கொடிமரமும் பிறவும் உள்ளன. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். பின் பக்கம் சொற்பொழிவுகளுக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வகையில் அழகிய கலை அரங்கம் உள்ளது. அடுத்து அட்டிற் சாலையும் பூசிப்பவர் தங்கும் இடமும் உள்ளன. இறைவன் படையல் முடிந்ததும் புளி சாதம், தயிர்ச் சாதம், லட்டு முதலியன அன்பர்களுக்கு தரப்பெறுகின்றன. நடுவில் ஒரு சிறு நூல் நிலையமும் வேறு சிறு அறைகளும் அலுவலக அறைகளும் உள்ளன. வெளியே நீண்ட தாழ்வாரமும் உள்ளது. எனவே எல்லா வசதிகளும் பொருந்திய இத் திரு வேங்கடம் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்வ தில் வியப்பில்லை. அமெரிக்க நாட்டு மக்களும் இந்தியரும் சனி, ஞாயிறு, பிற விடுமுறைகளில் கூட்டம் கூட்டமாக வருவராம். இங்கே இறைவனுக்கு ஊஞ்சல், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் தனிக் கட்டணங்கள் உள்ளன. நாடொறும் மூன்று வேளை பூசனை நடைபெறுகின்றது. தமிழ்நாட்டிலிருந்தும் கன்னட நாட்டிலிருந்தும் அந்தணர்கள் பூசைக்கென வந்துள்ளார். கம்பன் பிறந்த தேரழுந்துாரில் பிறந்த ஒருவர் இறைபணியாற்றுகின்றார். அலுவலகத்திலேயே தேங்காய், பழம், கற்பூரம் முதலியன தருகின்றமையின் வருபவர் அவற்றை வெளியே தேட வேண்டியதில்லை. அருச்சனை முதலியவற்றிற்கும் தனிக்கட்டணம் உண்டு. முற்றும் வேங்கடமாகவே இருக்கும் இக் கோயிலுள் என்னை மறந்து இறைவன் முன் அமர்ந்தேன். - வேங்கடவன் திருமுன் கருடன் சன்னதிக்கருகில் எல்லாச் சந்நிதிகளையும் ஒரு சேரக்காணும் வகையில் சுமார் 11மணி அளவில் உட்க்ார்ந்தேன். என்னை மறந்து அவனடி நினைந்து உணர்விழந்தேன். பகல் மணி அளவில் அங்குள்ள