பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அன்பர் உண்ண அழைக்கும்போதுதான் வெளிவந்தேன். நெடுந்துாரம் வரிசையில் நின்று உள்ளே சென்றால் ஒரு நொடியும் அவன்முன் நிற்கவைக்காது, சருகு, சருகு, சருகு' என்று ஒலி எழுப்பி விரைக விரைக' என வெளியனுப்பும் - சில சமயம் தள்ளும் அந்த வேங்கடத்தையும் இங்கே மணிக் கணக்கில் முந்நின்று பாடிப் பரவி மகிழும் வேங்கடத்தையும் நெடிது நினைந்தேன். எந்தவித வேறுபாடும் தோன்றா வகையில் உலகு புரக்கும் உத்தமனும் அன்னையும் ஒருசேரக் காட்சியளிக்கும் நிலையினையும் நினைந்தேன். அங்கே வேங்கடவனைக் கண்டு, கீழிறங்கி சில கல் தாண்டினால் தான் அலர்மேல் அன்னையைக் காண இயலும். இங்கே இருவரையும் இணைத்துக் கண்டு மகிழ்கின்றனர். பகல் உணவுக்குப்பின் நான் அருகிருந்த நூல் நிலையத்தில் சென்று சிலவற்றைப் படித்தேன். இந்துக்கள் மட்டுமின்றிச் சில வெள்ளையர்களும் உள் வந்து கண்டு செல்கின்றனர். ஒரு சிலர் வழிபாடும் ஆற்றுகின்றனர். இந்த நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய மக்களும் பிறரும் இங்கே நாள் தோறும் வந்து கொண்டிருக்கின்றனர். சனி ஞாயிறு இரு நாட்களிலும் நிரம்பக் கூட்டம் இருக்கும் என்றனர். ஞாயிறு தோறும் வேங்கடவனுக்கு அபிடேகம் உண்டு. அங்கே தமிழகத்தில் திருமால் கோயில்களில் பெரும்பாலும் மூலவருக்கும் அபிடேகம் செய்வது இல்லை. பாதத்தில் நீர் வார்த்து வழிபடுவர். அபிடேகமெல்லாம் உலாப்போகும் உற்சவ மூர்த்திக்கே. ஆனால் இங்கே வேங்கடவனுக்கே (மூலவர்) ஞாயிறுதொறும் காலை 11மணி அளவில் எல்லா வகையான அபிடேகங்களும் நடைபெறும் என்றனர். அப்படியே ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மூர்த்திக் கும் தனி அபிடேகம் உண்டாம். தெளிந்த உளத்தோடு, தெய்வ அருள்பெற்ற நிறை வோடு, மாலை திரு. வள்ளியப்பருடன் வீடு திரும்பினேன். வீட்டிற்குச் சுவரெல்லாம் வெறும் மரத்தினால் இருப்பதற்கு இதுவரை யாரும் காரணம் கூறவில்லை. (ஒரு வேளை கல்