பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 2.5.85 215 சிமிட்டி இராது; மரம் அதிகம் உண்டு. அல்லது இதுதான் முறை என்றனர் சிலர்). ஆனால் திரு. வள்ளியப்பன் அவர் கள் தக்க காரணம் கூறினர். மரத்தால் சட்டமிட்டு, இடை யில் 4 அல்லது 5 அங்குல இடைவெளியிட்டு, அதில் பஞ்சு - அதன் சார்புடைப் பொருள்கள் இட்டு, இருபக்கமும் ஒட்டுப் பலகையால் மூடிச் சுவர் அமைப்பர். அப்படி அமைப்பதால் புறத்தில் உள்ள குளிர் அவ்வளவாக உள்ளே புகுவதில்லை: எனவே குளிர்காலத்தில் அகத்தைச் சூடாக வைத்திருக்கவே இந்த ஏற்பாடு என்றனர். மிகப்பொருத்தமாக இருந்தது. மேலும் இங்கே நடைபெறும் பல தனியார் பாடவகுப்புகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்து, இரவு பத்துமணி அளவில் படுக்கச் சென்றேன்.