பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 3.5.85 ஊரிலிருந்து புறப்பட்டுச் சரியாக ஒரு மாதம் கழிந்து விட்டது. கண்ட இடங்கள் பல உதவிய அன்பர் அநேகர். அங்கே வள்ளியம்மாள் பள்ளியில் 3-4-85ல் அனைவரும் 'விடை தந்து அனுப்ப, கடந்த ஒருமாதம் ஐரோப்பிய நாடு கண்டு, அமெரிக்காவிலும் பலவிடங்கள் கண்டு இன்று 3-5.85ல் வள்ளியப்பர் இல்லத்தில் - பிட்ஸ்பர்க்-வேங்கடவன் வாழிட்த்தில் இருப்பதை எண்ணினேன். இன்று வானம் தெளிவுற்றிருந்தது; கதிரவன் கிரணங்களைக் காலையி லேயே பரப்பி மேலேறினார். நான் இந்த ஊர் எல்லையைத் தொடுமுன் தொடங்கிய மழை நேற்று முழுதும் விடாது பெய்துகொண்டிருந்தது. நம் ஊரில் சில ஆண்டுகளில் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விடாது பெய்யும் நிலையில் அது இருந்தது. ஆறு, வழிநடைக் கால்வாய்கள், பிற அனைத்திலும் வெள்ளம் புரண்டோடிற்று. இது மலைப் பகுதியாக இருந்தமையால் அதிகமான நீர்த்தேக்கம் எங்கும் இல்லை. நான் தொடர்ந்து இருப்பின் என் செய்வதென எண்ணினேன். எனினும், நேற்றே திரு. வள்ளியப்பன் அவர் கள் இந் நாட்டில் இப்படித்தான் இருநாள் மழை, இருநாள் வெய்யில் இருக்கும்; நாளை மறுநாள் நல்ல சூரிய ஒளி இருக்கும் என வானிலையாளர் கூறினர் எனச் சொன்னார். - காலை எழுந்தவுடன் கடன்களை முடித்துக்கொண்டு எனது இந்த மாத நிகழ்ச்சிகளில் சில மாற்றங்களைச் செய்து கொண்டேன். இரண்டு நாட்கள் சிகாகோவிற்கு முன்பாகச்